Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 ஏலம் - தோனிக்கு பிறகு யார்? சிஎஸ்கே குறிவைக்கப் போகும் 4 விக்கெட் கீப்பர்கள்

கொச்சி : ஐபிஎல் 2023ஆம் அண்டு சீசன் தான் தோனி கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தொடராக அமையலாம்.

இதனால் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக நடப்பு மினி ஏலத்திலேயே புதிய விக்கெட் கீப்பரை சிஎஸ்கே தேர்வு செய்யலாம்.

இந்த நிலையில், எந்த விக்கெட் கீப்பர்களை சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் குறிவைக்கும் என்பதை தற்போது காணலாம்.

தினேஷ் பானா

தினேஷ் பானா

நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராக இருந்தால் , இந்த பெயர் உங்களுகு நிச்சயம் மறந்து இருக்காது. அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தோனியை போல் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசி இருந்தார். இதனால், கடந்த தொடரின் போதே சிஎஸ்கே அணி, அவரை அழைத்து வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கியது.

ஜெகதீசன்

ஜெகதீசன்

தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன் காட்டில் இம்முறை பண மழை நிச்சயம். விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 5 சதம், ஒருநாள் போட்டி வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 277 ரன்கள் உள்ளிட்ட சாதனையை படைத்திருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி இவரை மீண்டும் தக்கவைக்க முயற்சி செய்யலாம்.

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத்

ஐபிஎல் அனுபவமும், அதிரடி திறமையும் உள்ள கே எஸ் பரத்தை சிஎஸ்கே விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஆர்சிபி, டெல்லி என ஐபிஎல் அணிகள் மற்றும் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய அனுபவம் போன்றவை பரத்துக்கு இருப்பதால் சிஎஸ்கே இவர் மீது குறிவைக்கலாம்.

லிட்டன் தாஸ்

லிட்டன் தாஸ்

வங்கதேச கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழும் லிட்டன் தாஸ் நல்ல விக்கெட் கீப்பரும் கூட. இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் இவர் அடித்த ஆட்டத்தை பலரும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சுழற்பந்துவீச்சையும் நன்றாக விளையாட கூடியவர். இதனால் லிட்டன் தாஸ் மீது சிஎஸ்கே குறிவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Story first published: Tuesday, December 20, 2022, 12:42 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+