
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்த மினி ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏலத்தில் பங்கேற்காத ஸ்டோக்ஸ், இம்முறை விளையாட தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் நடப்பு ஏலத்தில் ஸ்டோக்ஸ் 18 கோடி ரூபாய் அளவில் செல்ல வாய்ப்பு உள்ளது. பஞ்சாப், ஐதராபாத் அணிகள் ஸ்டோஸை வாங்க கடும் போட்டி போட வாய்ப்பு உள்ளது.

சாம் கரண்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைக்குட்டி சிங்கம் என்று ரசிகர்களால் போற்றப்படும் சாம் கரண், தற்போது பந்துவீச்சில் மேலும் மெருகேறி இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலககோப்பையிலும் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். இதனால் சாம் கரணும் 18 கோடி ரூபாய் அளவிற்கு செல்ல வாய்ப் உள்ளது.

கேமிரான் கிரீன்
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கேமிரான் கீரின் கடந்த இந்திய சுற்றுப் பயணத்தின் போது, பேட்டிங், பந்துவீச்சு என கலக்கினார். மேலும் கேமிரான் கீரினை தொடக்க வீரராக கூட பயன்படுத்த முடியும். இதனால், அவரை தேர்வு செய்ய பல்வேறு அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும்.

ஹாரி புருக்
இங்கிலாந்து அணியின் நடுவரிசை வீரராக விளங்கும் ஹாரி புருக், டி20 போட்டிக்கு என்றே அளவு எடுத்து தைத்தது போல் விளையாடி வருகிறார். நடுவரிசையில் கேவீன் பீட்டர்சனை போல் விளையாடும் ஹாரி புருக், பல அணிகளுக்கு தேவைப்படும் வீரராக நிச்சயம் இருப்பார். குறிப்பாக சுழற்பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்ளும் திறமை இவருக்கு இருப்பதால், பல அணிகள் இவருக்காக போட்டி போடும்.

ஓடியன் ஸ்மித்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டராக விளங்கும், ஓடியன் ஸ்மித், இம்முறை 12 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது. பிராவோ போன்ற வீரருக்கு மாற்றாகவும் இவர் இருப்பார். கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய 6 போட்டியில் 51 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் பஞ்சாப் இவரை நீக்கியது தவறான முடிவு. ஒடியன் ஸ்மித் போன்ற வீரர்கள் எல்லாம் எரிமலை போல் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் வெடிக்கலாம். இதனால், அந்த நம்பிக்கையில் ஒடியன் ஸ்மித் இம்முறை அதிக விலைக்கு போகலாம்.


Click it and Unblock the Notifications











