
சிறப்பான பார்ம்
இதனால் இம்முறை புஜாராவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் புஜாரா இம்முறை ஐபிஎல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்காக உள்ளது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் ஒருவராக திகழ்ந்த கேதர் ஜாதவ் இம்முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கேதர் ஜாதவ்.

கேதர் ஜாதவ்
இதனால் இம்முறை புஜாராவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் புஜாரா இம்முறை ஐபிஎல்லில் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்காக உள்ளது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கேதர் ஜாதவ் இம்முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கேதர் ஜாதவ்.

பயிற்சியாளர் பொறுப்பு?
ஆனால் கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக விளையாடிய கடைசி சீசனில் சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த ஆண்டு அவரை அணியிலிருந்து சிஎஸ்கே அணி நீக்கியது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் விலை போகவில்லை. இந்த காரணத்தால் தற்போது அவர் மினி ஏலத்தில் தனது பெயரை கொடுக்கவில்லை.

விஹாரி
இந்த நிலையில் கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்திய டெஸ்ட் அணி வீரர் ஹனுமா விகாரியும் ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. ஹனுமா விகாரி 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடினார்.

கவுண்டி கிரிக்கெட்
அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் வீரராக பச்சை குத்தப்பட்ட ஹனுமா விகாரியை தொடர்ந்து எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் தனது பெயரை அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் காலத்தில் புஜாராவும் ஹனுமா விகாரியும் இங்கிலாந்தில் சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











