Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஜடேஜா ரெடி.. ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைத்த காஷ்மீர் வீரர்..கிடைச்சா செம லக்.. வீடியோ

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பே சென்னை, மும்பை அணிகள் தங்களது அணியை தயார் செய்துவிட்டன. எனினும் தற்போது கூடுதல் வீரர்களை தேர்வு செய்து அணியை பலப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே உள்ளது. அதாவது சீனியர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே உள்ளது.

ஐபிஎல் தொடரில் அப்துல் ஷமத், உம்ரான் மாலிக்கிற்கு பிறகு அனைத்து அணிகளின் கண்களும் ஜம்மு காஷ்மீர் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் நமக்கு ஏதேனும் வீரர் கிடைக்க மாட்டாரா என்ற ஏங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் சிஎஸ்கே, 25 வயதான இளம் வீரர் ஒருவரை கண்டு பிடித்துள்ளது. அவர் யார், அவருடைய பலம் என்ன என்பதை தற்போது காணலாம்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

காஷ்மீர் வீரர் என்ற உடன், வேகப்பந்துவீச்சாளர் என்று நினைக்க வேண்டாம். நாம் இப்போது பார்க்க போவது அபித் முஸ்தாக். கிளாசிக் இடது கை ஸ்பின்னர் மற்றும் ஆல் ரவுண்டர். பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் விளையாடுகிறது. இதனால் சென்னை அணியை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சை பலப்படுத்துவது முக்கியம்.

அதிரடி பேட்ஸ்மேன்

ஏற்கனவே அணியில் மொயின் அலி, ஜடேஜா , மகீஷ் தீக்சனா, பிராசாந்த் சோலங்கி என 4 ஸ்பின்னர்கள் உள்ளனர். இதில் அபித் முஸ்தாக்கும் இணைந்தால் சிஎஸ்கேவின் பலம் மேலும் அதிகரிக்கும். ஏனென்றால் சையது முஸ்தாக் அலி டி20 பேட்டிங்கிலும் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அவருடைய பேட்டிங்கை பார்த்தாலே பாதி ரெய்னா, பாதி ஜடேஜா மாதிரி தெரியும்.

நல்ல பவுலர்

நல்ல பவுலர்

விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்காக 19 பந்துகளில் 42 ரன்களை விளாசி இருக்கிறார். இதே போன்று சையது முஸ்தாக் டி20 தொடரில் பலம் வாய்ந்த கர்நாடகாவுக்கு எதிராக முஸ்தாக் 26 பந்தில் 32 ரன்களுடனும், 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.ஜடேஜாவுக்கு மாற்றாக அளவு எடுத்து தைத்தது போல் அபீத் முஸ்தாக் விளங்குகிறார். நடப்பு சீசனில் விளையாடிய 2 ரஞ்சி போட்டியில் அபித் முஸ்தாக் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

துருப்பு சீட்டு

இதனால் அபீத் முஸ்தாக் சிஎஸ்கே அணியின் துருப்பு சீட்டாக விளங்க அதிக வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போது வரை நடுவரிசையில் கூட பயன்படுத்தலாம். இல்லையெனில் அடுத்த ஆண்டு கூட சீனியர்களுக்கு மாற்று வீராக அபித் அலியை தோனி பயன்படுத்தலாம். இதனால் சிஎஸ்கேவின் ரேடாரில் அபித் முஸ்தாக் நிச்சயமாக அறியப்பட்டு இருப்பார். ஏற்கனவே டெல்லி அணியும் அபித் முஸ்தாக்கை அழைத்து பரிசோதனை நடத்தி இருக்கிறது.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

நாளை நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் திறமைக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நினைக்கும் அணி, அபித் முஸ்தாக்கிற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கி கொள்ளும். சிஎஸ்கே, டெல்லி மற்றும் மும்பை அணிகள் இவரை குறிவைத்து எடுக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணி இவரை தேர்வு செய்துவிட்டு பயன்படுத்தாமல் பெஞ்சில் அமர வைக்க முடிவு எடுத்தால் தயவு செய்து அவரை வேறு அணிக்காவது விட்டுத்தரலாம்.

Story first published: Thursday, December 22, 2022, 18:41 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+