For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மினி ஏலம்.. பாதியாக குறைக்கப்பட்ட பட்டியல்.. எத்தனை மணிக்கு தொடங்கும்.. எப்படி நடைபெறும்?

மும்பை : ஐபிஎல் மினி ஏலம் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருந்தார்கள். மினி ஏலத்தில் அத்தனை பெயரும் ஏல மேடைக்கு கொண்டு வரப்பட சாத்தியம் இல்லை.

இதனையடுத்து, தங்களுக்கு தேவையான அல்லது விருப்பம் உள்ள வீரர்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புங்கள் என்று பிசிசிஐ அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது.

மினி ஏலம்

மினி ஏலம்

இதன் அடிப்படையில், தற்போது திருத்தப்பட்ட இறுதிக் கட்ட ஐபிஎல் பட்டியலில் 405 வீரர்கள் உள்ளனர். இதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 43 செட்களாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது மினி ஏலம் என்பதால், ஏலத்தின் விதிமுறைகளே வேறு மாதிரி இருக்கும்.

87 இடங்கள்

87 இடங்கள்

அதாவது ரூல்ஸ் ஒன்று தான், ஆனால் மினி ஏலம் வேகமாக நடத்தப்படும். மொத்தமே 87 இடங்களுக்கு தான் ஏலம் நடைபெறுகிறது. இதன் காரணமாக 87 இடங்களும் நிறைவு அடைந்துவிட்டால், அப்படியே ஏலம் நிறுத்தப்படும். மற்ற வீரர்கள் ஏல மேடைக்கு கூட வர மாட்டார்கள். இல்லை பெரும்பாலான அணிகள் தங்களது இடத்தை நிரப்பிவிட்டார்கள். சில அணிகள் மட்டும் இன்னும் ஒன்று இரண்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வைத்து கொள்வோம்.

ஏற்பாடு

ஏற்பாடு

அப்போது இந்த 405 வீரர்கள் பட்டியல், மேலும் சுருக்கப்படும். அதாவது அணிகள் விரும்பும் வீரர்களை மட்டும் ஏல மேடைக்கு கொண்டு வரப்படுவார்கள். இதன் காரணமாக மினி ஏலம் விரைவாக நடந்து முடிந்துவிடும். ஒரு வீரர் ஏல மேடைக்கு வந்தார், என்றால் அவரை 10 விநாடிக்குள் யாரும் கேட்கவில்லை என்றால், அவர் விலை போகாத வீரர் என்று அறிவிக்கப்படுவார்.

நேரம்

நேரம்

இதன் காரணமாக மினி ஏலம் விரைவாக நடைபெறும். இந்த மினி ஏலம் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். அதற்கு முன்பே முடிய கூட வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக ஐதராபாத் 13 வீரர்களும், கொல்கத்தா அணி 11 வீரர்களையும் ஏலத்தில் எடுக்க வேண்டும். சென்னை அணி அதிகபட்சமாக 7 வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும்.

Story first published: Tuesday, December 13, 2022, 19:41 [IST]
Other articles published on Dec 13, 2022
English summary
IPL Mini auction date and timing - rules and regulations ஐபிஎல் மினி ஏலம்.. பாதியாக குறைக்கப்பட்ட பட்டியல்.. எத்தனை மணிக்கு தொடங்கும்.. எப்படி நடைபெறும்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+