IPL மினி ஏலத்தில்..களத்தில் குதித்த காவ்யா மாறன்.. மிரண்ட அணிகள்.. ஹாரி புருக்கை தட்டி தூக்கினார்
கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஹாரி புருக்கின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இங்கிலாந்தில் இளம் வீரரான ஹாரி புருக் சுழற்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ள கூடியவர்.
இதனால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால் ஹாரி புருக் பல் நடு வரிசையில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க விளங்குவார்.
அண்மையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட தொடர்ந்து
மூன்று சதம் விளாசி அசத்தினார்.

உயர்ந்த விலை
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 99 போட்டியில் விளையாடி 2432 ரன்கள் விளாசி இருக்கிறார். 148 என ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. இதனால் ஹாரி புரூக் பெயர் வந்தது உடனே பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் கடுமையாக மோதிக்கொண்டனர். பெங்களூர் அணியிடம் குறைவான பணம் இருந்த போதிலும் ஹாரி புருக்கை விடாமல் துரத்திக் கொண்டிருந்தனர்.

கடும் போட்டி
ஒரு கட்டத்தில் 5 கோடிக்கு மேல் விலை சென்றதும் பெங்களூர் அணி பின்வாங்கியது. இதனை அடுத்து களத்தில் குதித்த ஐதராபாத் அணியின் காவியா மாறன் விலையை மீண்டும் ஏற்றத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஜஸ்தான் அணி காவியாவுக்கு கடுமையாக போட்டி கொடுத்தது.

விடாமல் போராடிய காவ்யா
எனினும் காவியா மாறன் விடுவதாக இல்லை. இதனால் ஹாரி புருக்கின் விலை நமது ஊர் பெட்ரோல் விலையைப் போல கிடுகிடு என உயர்ந்தது.இதனால் அடிப்படை விலை ஒன்றரை கோடியுடன் இருந்த சாரி புக் 13 கோடி ரூபாய் 25 லட்சம் ரூபாய் க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது இதில் அடுத்த உற்சாகத்தில் காவியா மாறன் குதித்தார் வில்லியம்சனுக்கு பதில் தற்போது ஹாரி புரூக் அந்த இடத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவ்யா அதிரடி
இதன் மூலம் ஐதராபாத் அணியில் கையிருப்பு தொகையும் குறைந்தது. இதனால் ஆல் ரவுண்டர்களை குறி வைக்கும் திட்டத்தில் ஐதராபாத் அணி மாற்றி இருப்பதாக தெரிகிறது. ஹாரி புருக்கை தொடக்க வீரர், நடுவரிசை என அனைத்து இடத்திலும் ஐதராபாத் அணி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. காவ்யா மாறனின் இந்த அதிரடியை எந்த அணியும் எதிர்பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications