Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம்..நாளை மிச்சர் சாப்பிட போகும் அணி எது? அணிகளிடம் கையிருப்பு தொகை என்ன?

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தை பொறுத்தவரை அனைத்து அணிகளிடமோ குறைவான அளவு தான் காசு இருக்கும். இதனால் நாளை பெரும்பாலான அணிகள் மிச்சர் தான் சாப்பிட போகும். சிஎஸ்கே, மும்பை போன்ற அணிகள் பெரும் தொகையை ஒரே அணிக்கு கொடுத்து விட்டு, நாளை சும்மா தான் அமர போகிறார்கள்.

இந்த நிலையில் ஐபஎல் அணிகள் யாரை விடுவித்து இருக்கிறது. கைவசம் எவ்வளவு தொகை இருக்கிறது. இதில் எத்தனை வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்

ஹைதராபாத் அணி தங்களது முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் வில்லியம்சனை விடுவித்ததால் அந்த அணியிடம் தற்போது 42 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது.

அதிக தொகை

அதிக தொகை

இதன் மூலம் ஐதராபாத் அணி மினி ஏலத்தில் 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட அதிகபட்சம் 13 வீரர்களை வாங்கலாம். பஞ்சாப் அணியிடம் 32 கோடியே 20 லட்சம் ரூபாய் மிஞ்சி இருக்கிறது.ஓடியன் ஸ்மித், மாயன் அகர்வால் ஆகியோரை விடுவித்ததால் அந்த அணியிடம் இவ்வளவு பணம் மிச்சம் இருக்கிறது. இந்த தொகையை வைத்து பஞ்சாப் அணி அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை வாங்கலாம்.

லக்னோக்கு எவ்வளவு

லக்னோக்கு எவ்வளவு

இதற்கு அடுத்தபடியாக லக்னோ அணியிடம் 23 கோடியே 35 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. இதனை வைத்து அந்த அணி 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களை வாங்கலாம். ஆண்டிரு டை, அன்கித் ராஜ், சமீரா, ஜெசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே ஆகியோரை விடுவித்துள்ளதால் அந்த அணி தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

சாம்பியன் அணிகள் கைவசம் எவ்வளவு?

சாம்பியன் அணிகள் கைவசம் எவ்வளவு?

இதற்கு அடுத்தபடியாக மும்பை அணி இடம் 20 கோடியே 55 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. இதனை வைத்து மும்பை அணி சுழற் பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மும்பை அணி 3 வெளிநாட்டு வீரர் உள்பட 9 வீரர்களை வாங்கலாம். இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து சிஎஸ்கே பிராவோவுக்கு மாற்றான வீரரை தேர்வு செய்யலாம். இதில் சிஎஸ்கே 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை அதிகபட்சமாக வாங்கலாம்.

டெல்லி மற்றும் குஜராத்

டெல்லி மற்றும் குஜராத்

இதேபோன்று டெல்லி அணியிடம் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது.சர்துல் தாக்கூர், கே எஸ் பாரத் ,மந்திப் சிங் உள்ளிட்ட வீரர்களை அவர்கள் விடுவித்துள்ளனர்.இதனால் அந்த அணி 2 வெளிநாட்டு வீரர்கள் உப்ட 5 வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்யலாம். இதேபோன்று நடப்பு சாம்பியன் ஆன குஜராத் அணியிடம் 19 கோடியே 25 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. குஜராத் அணி டோமினிக் டிராக்ஸ், ஜேசன் ராய் , வருண் அரோன் ஆகியோரை விடுவித்துள்ளது .

ராஜஸ்தான் கைவசம்

ராஜஸ்தான் கைவசம்

குஜராத் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 7 வீரர்களை வாங்கலாம். குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி13 கோடியே 20 லட்சம் ரூபாய் கையிருப்புடன் ஐபிஎல் மினி ஏலத்தை அணுகவுள்ளது. ஜிம்மி நீஷம் , நாதன் கொல்டர் நைல்,வெண்டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களை ராஜஸ்தான் அணி விடுவித்துள்ளது. இதனால் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள்உட்பட 9 வீரர்ளை வாங்கலாம். ஆர்சிபி, கொல்கத்தா ஆர் சி பி அணியிடம் எட்டு கோடியே 75 லட்சம் ரூபாய் மட்டும்தான் மிச்சமிருக்கிறது.

கேகேஆர் 11 வீரர்கள்

கேகேஆர் 11 வீரர்கள்

அந்த அணி ஜெசன் பெகுரண்டிராப், லவ்லி சிசோதியா , ருத்தர்போர்டு ஆகிய வீரர்களை விடுவித்து இருக்கிறது. அந்த அணி 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 7 வீரர்களை அகிபட்சமாக வாங்கலாம். ஐபிஎல் மினி ஏலத்தில் குறைந்தபட்ச தொகையுடன் கொல்கத்தா அணி இருக்கிறது. அந்த அணியிடம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் தான் மிஞ்சி இருக்கிறது. ஏலத்துக்கு முன்பே மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளதால் அந்த அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 வீரர்களை வாங்கலாம்.

Story first published: Thursday, December 22, 2022, 16:50 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+