Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலத்தில் டை பிரேக் முறை.. பிசிசிஐ வைத்த புதிய டிவிஸ்ட்.. எப்படி இந்த விதி பயன்படும்

மும்பை : ஐபிஎல் மினி ஏலம் வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஏலத்தில் 87 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கடந்த முறை ஏலத்தை நடத்திய இங்கிலாந்து சேர்ந்த எட்மேடஸ், இம்முறையும் ஏலத்தை நடத்த உள்ளார்.

இந்த ஏல விதிகள் குறித்து பிசிசிஐ தற்போது ஐபிஎல் அணிகளுக்கு விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது பட்டியலில் உள்ள முதல் 87 வீரர்களின் பெயர் வரிசையாக ஏலம் மேடைக்கு வரும்.

அதன் பிறகு உள்ள வீரர்களை யார் வேண்டுமோ அவர்களின் பெயரை மட்டும் பத்து அணிகளும் ஒரு பேப்பரில் எழுதி தர வேண்டும் .

விரைவாக நடத்த திட்டம்

விரைவாக நடத்த திட்டம்

அந்த வீரர்கள் மட்டுமே ஏழை மேடைக்கு வருவார்கள். அந்த வீரர்களை முப்பது வினாடிகளுக்குள் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யவில்லை என்றால், அவர்கள் விலை போகாத வீரர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த நிலையில் பல அணிகளிடம் கையிருப்பு தொகை குறைவாக இருப்பதால் நினைத்த படி வீரர்களை எடுக்க முடியாத நிலை இருந்தது. உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் மட்டும் தான் இருக்கிறது.

பணம் இல்லை

பணம் இல்லை

இதில் அவர்கள் சாம் கரனுக்கு மட்டுமே 19 கோடி ரூபாய்கள் செலவு செய்து விட்டால் எஞ்சியுள்ள ஏழு வீரர்களை தேர்வு செய்ய அவர்களுக்கு போதிய விலை இருக்காது. இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ டை பிரேக் என்ற முறையை கொண்டு வரவுள்ளது. அதன்படி ஒரு வீரரை இரண்டு அணிகள் போட்டி போட்டு வாங்கும் நிலையில் ஏதேனும் ஒரு அணிக்கு பணம் தீர்ந்து விட்டது என்றால் மறு அணி கேட்கும் தொகைக்கு அந்த வீரர் விற்கப்படுவதாக அறிவிக்கப்படுவார்.

டை பிரேக் முறை

டை பிரேக் முறை

ஆனால் விற்கப்பட்ட வீரரை நாங்கள் டை பிரேக் முறையில் வாங்க விரும்புகிறோம் என்று கையிருப்பு தொகை இல்லாத அணி அறிவித்தால் தனி நடைமுறை ஒன்று கொண்டுவரப்படும். பணம் இல்லாத நிலையில் எப்படி வாங்க முடியும் என நினைத்தால் அங்கு தான் பிசிசிஐ ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளது. உதாரணத்துக்கு சிஎஸ்கே அணியும் பஞ்சாப் அணியும் சாம்கரணை 19 கோடி ரூபாய் வரை ஏலத்தில் கேட்டு இருக்கிறது என வைத்துக் கொள்வோம் .

எப்படி பயன்படும்?

எப்படி பயன்படும்?

ஆனால் சிஎஸ்கே விட அடுத்த தொகை கேட்க பணம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது பஞ்சாப் அணி தங்களிடம் கூடுதலாக பணம் இருந்தால் அதனை கேட்டு சாம் கரனை வாங்கி கொள்வார்கள். அதன் பிறகு சிஎஸ்கே எங்களுக்கு அந்த வீரர் வேண்டும் என்று கேட்டால், டை பிரேக் முறையில் கடைபிடிக்கலாம். அப்போது இரண்டு அணிகளும் ரகசிய படிவத்தில் கூடுதல் தொகையை குறிப்பிட்டு பிசிசிஐக்கு வழங்க வேண்டும். அதில் எந்த அணி அதிக தொகை கேட்கிறதோ அவர்களுக்கு அந்த வீரர் விற்கப்படுவார். கூடுதலாக வழங்கப்படும் பணம் அந்த வீரருக்கு சேராது. மாறாக பிசிசிஐக்கு தர வேண்டும்.

பிசிசிஐ டிவிஸ்ட்

பிசிசிஐ டிவிஸ்ட்

டைபிரேக்கரில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கூடுதலாக கொடுக்கலாம். ஆனால் அதன் விவரம் வெளியிடப்படாது. கூடுதலாக வழங்கப்படும் பணம் அணியின் கையிருப்பு தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த டைபிரேக் முறையை நடப்பு ஏலத்தில் பிசிசிஐ அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் அனைத்து அணிகளும் வீரர்களை பணம் இல்லை என்று கவலைப்படாமல் இஷ்டத்திற்கு வாங்கலாம். அதனால் வீரர்களை ஏலத்தில் எடுத்து விட்டோம் என்று மகிழ்ச்சியில் இனி யாரும் குதிக்க முடியாது. ஏனென்றால் இந்த முறையை பயன்படுத்தி மற்ற அணிகள் உங்கள் அபிமான வீரர்களை மீண்டும் வாங்கிவிடலாம்.

Story first published: Thursday, December 22, 2022, 23:30 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+