IPL Mock Auction- ஸ்ரேயாஸ் ஐயரை வெறுப்பேற்றிய KKR அணி.. இந்த பணம் மட்டும் கிடைச்சா நொந்து போயிடுவார்
கொல்கத்தா: ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்திற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் தீவிர இறுதி கட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ஏலத்திற்கு முன்பே ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. ரிங்கு சிங், சுணில் நரேன், ஆண்டிரு ரஸில், வருண் சக்கரவர்த்தி, ரமந்திப் சிங் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்கள் தற்போது கே கே ஆர் அணிகளால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கேகேஆர் அணியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு தற்போது கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் தமக்கு அதிக ஊதியம் வேண்டும் என்று கூறி கே கே ஆர் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி சென்று இருக்கிறார்.
ஐபிஎல் வென்று கொடுத்த கேப்டன் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் வரும் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு செல்லும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்ரேயாஸ் வெறுப்பேற்றும் வகையில் தற்போது கேகேஆர் அணி ஒரு மாதிரி ஏலத்தை நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரை வெறும் 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை மாதிரி ஏலத்தில் கொல்கத்தா அணி மீண்டும் தேர்வு செய்து இருக்கிறது.
இது ஸ்ரேயாஸ் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. அதிக விலைக்கு செல்வார் என கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயரை வெறுப்பேற்றும் விதமாக வேண்டுமென்றே தாங்களே ஏலத்தை நடத்தி நான்கு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு தான் செல்வார் என்று கூறுவது சரி கிடையாது என்று அவருடைய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மற்றொரு கே கே ஆர் அணி வீரரான மிட்செல் ஸ்டார்க், கடந்த மினி ஏலத்தில் 24 கோடியை 75 லட்சம் ரூபாய்க்கு சென்றார். ஆனால் அவர் இந்த மாதிரி ஏலத்தில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் கே.கே.ஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இதனை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் கேகேஆர் அணி இதுபோல் ஏலத்திற்கு தயாரானால் நிச்சயம் அவர்கள் உண்மையான மெகா ஏலத்தில் தடுமாறுவார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications