For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL மொயின் அலியை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு விசா மறுப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. அரசியல் காரணமா

சென்னை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே வீரர் மொயின் அலி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், 4 வாரமாகியும் விசா கிடைக்கவில்லை.

இதனால் மொயின் அலி, சிஎஸ்கே விளையாடும் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று குஜராத் அணியை சேர்ந்த பயிற்சியாளர் குழுவை சேர்ந்த அப்துல் நைம்க்கும் இதுவரை விசா கிடைக்கவில்லை.

சர்ச்சை

சர்ச்சை

பொதுவாக ஐபிஎல், விளையாட்டு போட்டியில் பங்கேற்க வரும் நபர்களுக்கு எவ்வித கேள்விகளும் இன்றி உடனடியாக விசா வழங்கப்படும். ஆனால், ஐபிஎல் தொடர்புடைய 2 இஸ்லாமியர்களுக்கு விசா இதுவரை வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிசிசிஐயிடம் சம்பந்தபட்ட அணி நிர்வாகம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தந்தை கவலை

தந்தை கவலை

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மொயின் அலியின் தந்தை முனிர் அலி, மொயின் அலிக்கு விசா வழங்காமல் இழுத்து அடிப்பது மோசம் என்று தெரிவித்தார். ஆனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மொயின் அலி இந்தியாவில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்படி இருந்தும் ஏன் விசா தரப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

பதில் இல்லை

பதில் இல்லை

எனினும், நாங்கள் மொயின் அலிக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே பல்வேறு பத்திரிகையாளர்களும் மொயின் அலி விசா குறித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் வெளியாகவில்லை.

Recommended Video

Moeen Ali-க்கு Visa கிடைப்பதில் தாமதம்.. கவலையில் CSK பயிற்சி முகாம்
அரசியல் காரணமா

அரசியல் காரணமா

மொயின் அலியை போன்று குஜராத் அணியை சேர்ந்த பயிற்சியாளர் குழுவை சேர்ந்த அப்துல் நைம்க்கும் லண்டனில் உள்ள இந்திய துதரகம் விசா வழங்கவில்லை. ஆனால் ஜாஸ் பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்களுக்கு விசா உடனடியாக வழங்கப்பட்டது. இதனால் அரசியல் காரணங்களுக்காக விசா மறுக்கப்படுகிறதா இல்லை, இவ்விருவர் மீதும் வேறு ஏதும் புகார் உள்ளதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Story first published: Wednesday, March 23, 2022, 19:00 [IST]
Other articles published on Mar 23, 2022
English summary
IPL – Moeen ali and other muslim support staff visa halted by India IPL மொயின் அலியை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு விசா மறுப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. அரசியல் காரணமா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+