Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரில் அதிக முறை 90 ரன்கள்.. சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியல்.. முழு விவரம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

Recommended Video

IPL 2022: DK முதல் Chahal வரை! Retain செய்திருக்க வேண்டிய Players | OneIndia Tamil

ஐபிஎல் போட்டியில் சதம் அடிப்பது என்பது மிகவும் பெருமை. ஆனால் சதத்தை நெருங்கி கோட்டை விடுவது எவ்வளவு பெரிய கஷ்டம்.

அந்த கஷ்டத்தை அதிக முறை அனுபவித்த வீரர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

IPL – Most Times Players Missed the century – Full list

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 90களில் ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தான். அதிகபட்சமாக 5 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று கேஎல் ராகுலும் 5 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் உள்ளார். இவர் 4 முறை சதத்தை தவறவிட்டுள்ளார்.

இதே போன்று விராட் கோலி 4 முறையும் தவறவிட்டுள்ளார். விராட் 5 முறை சதத்தை அடித்துள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதே போன்று கிறிஸ் கெயிலும் 4 முறை சதத்தை தவறவிட்டுள்ளார். அவர் 6 முறை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டுபிளஸிஸ் 3 முறை சதத்தை தவறவிட்டுள்ளார்.

இதே போன்று மேக்ஸ்வெல் 3 முறையும், வாட்சன் 3 முறையும் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டுள்ளனர். இதே போன்று 90 ரன்களில் சதத்தை அதிக முறை தவறவிட்ட கேப்டனாக வார்னர் உள்ளார். கோலி ஒரு முறையும்.ரோகித் ஒரு முறையும், ராகுல் ஒரு முறையும், தற்போது டுபிளஸிஸ் ஒரு முறையும் சதத்தை கேப்டனாக 90 ரன்களில் தவறவிட்டுள்ளனர்.

Story first published: Wednesday, April 20, 2022, 0:00 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+