Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சூப்பர் கிங்ஸ்" டோணி இனி... "ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்" அணியின் கேப்டன்!

கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இதுகாலம் வலம் வந்த எம்.எஸ்.டோணி இனி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரப் போகிறார்.

புதிய ஐபிஎல் அணியான புனே அணியின் பெயர் மற்றும் கேப்டன் உள்ளிட்ட விவரம் இன்று வெளியிடப்பட்டது. சஞ்சீவ் கோயங்காவை உரி்மையாளராகக் கொண்ட புனே அணிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

சென்னையிலும் சூப்பர் இருந்தது.. புனேவிலும் சூப்பர் வந்து விட்டது.. எனவே புனே அணிக்கு நல்ல காலம் என்று டோணி ரசிகர்கள் சந்தோஷப்பட ஆரம்பித்துள்ளனர்.

டோணி கேப்டன்

டோணி கேப்டன்

இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிட்ட கோயங்கா கூறுகையில், 2016 சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக டோணியை நான் வரவேற்கிறேன்.

அருமையான தலைவர்

அருமையான தலைவர்

டோணி எப்போதுமே அருமையான தலைவர். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியவர். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் அவரது சாதனை பிரமிக்கத்தக்க வைப்பது. புனே அணியையும் அவர் சிறப்பாக வழி நடத்துவார் என நம்புகிறேன் என்றார் அவர்.

ஒரு தொடருக்கு மட்டுமே கேப்டன்!

ஒரு தொடருக்கு மட்டுமே கேப்டன்!

இருப்பினும் 2016 தொடருக்கு மட்டுமே டோணியை கேப்டனாக அறிவித்துள்ளார் கோயங்கா. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதைக்கு எங்களது கவனம் 2016ம் ஆண்டு மட்டுமே. எனவேதான் இந்த வருடத்திற்கு மட்டும் டோணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஸ்டார் டீம்

ஸ்டார் டீம்

புனே அணியில் ஸ்டீவ் ஸ்மித், பாப் டூபிளஸிஸ், அஸ்வின், அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் உள்ளனர். இவ்வளவு பேர் இருப்பது அணியில் எந்தப் பிரச்சினையையும் உருவாக்காது என்றும் கோயங்கா நம்பிக்கை தெரிவித்தார்.

இது சிஎஸ்கே இல்லை

இது சிஎஸ்கே இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹஸ்ஸி இங்கு வருவாரா என்ற கேள்விக்கு, இது சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே அணியில் இருந்த சிலர் இங்கு வந்திருப்பதால் இதையும் சிஎஸ்கே என்று நினைக்கக் கூடாது என்று பட்டென்று பதிலளித்தார்.

கங்குலிக்கு இடமில்லை

கங்குலிக்கு இடமில்லை

புனே அணி நிர்வாகத்தில் எந்த வகையிலும் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் பெற மாட்டார், பங்கு வகிக்க மாட்டார் என்றும் கோயங்கா விளக்கினார். கங்குலியும், கோயங்காவும் சேர்ந்துதான் ஐஎஸ்எல் கால்பந்து அணியான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகு அய்யர்

ரகு அய்யர்

அணியின் தலைமை செயலதிகாரியாக ரகு அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாள் வேட்டி கட்டி விசிலடித்து வந்தார் டோணி.. இனி புனே ஸ்டைலில் புதுப் பொலிவுடன் வலம் வருவார்.. பார்த்து ரசிப்போம்!

Story first published: Monday, January 18, 2016, 15:15 [IST]
Other articles published on Jan 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+