Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கோப்பையை வென்றது எப்படி? குஜராத் வீரர்களின் வெற்றி ரகசியம்..வாழ்நாளில் பெரிய சாதனை என கருத்து

அகமதாபாத்: ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணி வீரர்கள், தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினர்.

Recommended Video

Gujarat Titans கேப்டன் Hardik Pandya செய்த தரமான் சம்பவம் | #Cricket

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.1வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

சாஹா பதிலடி

சாஹா பதிலடி

இதனையடுத்து குஜராத் அணி வீரர்கள் உற்சாகமாக மைதானத்திற்கு வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது பேசிய குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா, தாம் 5முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி 2வது முறையாக கோப்பையை வென்று இருப்பதாக தெரிவித்தார். ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, எங்கள் அணியை குறைத்து மதிப்பீடு செய்தது தவறு என்பதை நிரூபித்து உள்ளோம். முகமது ஷமி முதல் பந்தில் முதல் விக்கெட் எடுத்ததில் இருந்தே சிறப்பாக அமைந்ததாக கூறினார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

வெற்றி குறித்து பேசிய டேவிட் மில்லர், இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். இது ஒரு மகத்தான பயணமாக அமைந்ததாக மில்லர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வெட், எங்கள் அணி சூழல் சுமுகமாக இருந்ததாகவும். இதனை பயிற்சியாளர் நெஹ்ரா தான் உருவாக்கியதாக கூறினார்.

பொறுப்புடன் விளையாடினோம்

பொறுப்புடன் விளையாடினோம்

எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்ட மேத்தீவ் வெட், அடுத்த ஆண்டும் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ரணித் கான், கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். தம் வாழ்நாளில் பெரிய சாதனையாக இதனை கருதுகிறேன். அனைவரும் தங்களது பொறப்பை உணர்ந்து விளையாடினார்கள்.

மறக்க முடியாது

மறக்க முடியாது

இறுதிப் போட்டியில் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் பந்து வீசினோம். ஐபிஎலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். வெற்றி ரன்களை அடித்த சுப்மான் கில், வெற்றி பெற்றுள்ள அணியில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் ஹர்திக் தெரிவித்தார்.

Story first published: Monday, May 30, 2022, 11:36 [IST]
Other articles published on May 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+