Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கிடையாது.. ஐபிஎல் தொடரில் இவர்கள் தான் எங்கள் பரம எதிரி.. விராட் கோலி கருத்து

சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது ஆர் சி பி தான். இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடுகிறார்.

ஆர்சிபி அணியில் பல ஸ்டார் வீரர்கள் பல்வேறு காலங்களில் இருந்த போதும், அந்த அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆர் சி பி அணியின் கேப்டனாக 2013 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை விராட் கோலி தொடர்ந்தார்.

ipl 2025 cricket Virat kohli RCB CSK

அப்போதும் ஆர் சி பி அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை. ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பல சாதனைகளை விராட் கோலி படைத்த நிலையில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை தோற்கடித்த பிறகு விராட் கோலி ஓவராக கத்தினார். அது மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் விழும்போது விராட் கோலி அடாவடித்தனமாக நடந்து கொண்டார்.

மேலும் சிஎஸ்கே அணியை சென்னையில் ஆர் சி பி 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு வீழ்த்தவில்லை. இதனால் ஆர்சிபிக்கும் சிஎஸ்கேவும் தான் ஆகாது என்று ரசிகர்கள் கருதிக்கொண்டிருந்த நிலையில் தற்போது விராட் கோலி அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். விராட் கோலியிடம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிரி அணிகள் எது என்று கேட்கப்பட்டதற்கு, அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எனக் கூறியிருக்கிறார்.


இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ள பகையை தான் விரும்புவதாகவும் அவர் கூறினார். கே கே ஆர் அணிக்கு எதிராக விராட் கோலி இதுவரை 34 போட்டிகளில் விளையாடி 962 ரன்கள் அடித்திருக்கிறார். இது ஒரு சதம் 6 அரை சதம் அடங்கும். இதேபோன்று மும்பையின் எதிராக 33 போட்டியில் விளையாடி 855 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 5 அரை சதம் அடங்கும். மொத்தமாக 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 8004 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 8 சதம்,55 அரை சதம் அடங்கும். விராட் கோலிக்கு சிஎஸ்கேவை பிடிக்காது என தமிழக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த விளக்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்திருக்கின்றது.

Story first published: Monday, August 19, 2024, 10:28 [IST]
Other articles published on Aug 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+