கிறிஸ் பிரவுன் பாட.. காத்ரீனா கைப் ஆட.. ஐபிஎல் தொடக்க விழாவுக்கு அடேங்கப்பா ஏற்பாடுகள்!
மும்பை: ஐபிஎல் அக்கப் போர்.. அதாவது ஐபிஎல் கிரிக்கெட் போர் தொடங்கப் போகிறது. ஏப்ரல் 8ம் தேதி பிரமாண்ட தொடக்க விழாவுடன் நடப்பு சீசன் தொடங்கவுள்ளது. இதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் உள்ளூர் ஆட்டக்காரர்களோடு, வெளிநாட்டு ஆட்டக்காரர்களையும் களம் இறக்கி கலக்கவுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுன் வருகிறார். இவர் ஒரு பாடகர், நடனக் கலைஞர். லாயல், வித் யூ என பலஹிட்டுகளைக் கொடுத்த புண்ணியவான். மும்பையை தனது பாடலால் குலுங்க வைக்க வருகிறாராம்.

மேஜர் லேசர்
அதேபோல அமெரிக்க நடனக் கலைஞர் மேஜர் லேசரும் வருகிறார். இங்கிலாந்து ராப் கலைஞர் பியூஸ் ஓடிஜி, ஜமைக்காவைச் சேரந்த நைலா தார்போர்ன் ஆகியோரும் வருகிறார்கள்.

பிரவுனுக்கு ஒரே மகிழ்ச்சி
இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்று கிறிஸ் பிரவுன் கூறியுள்ளார். முதல் முறையாக வருகிரோம். உற்சாகமாக இருக்கிறது. அந்த இரவை நோக்கி காத்திருக்கிறேன் (அதாவது தொடக்க விழா கச்சேரியைச் சொல்கிறார்) என்று கூறியுள்ளார் பிரவுன்.

ரன்வீர், காத்ரீன், ஜாக்குலின்
இவர்கள் தவிர உள்ளூரைச் சேர்ந்த ரன்வீர் சிங், காத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் ஆடவுள்ளனராம். யோயோ ஹனி சிங்கும் இடம் பெறுகிறாராம்.

32 நாடுகளில் டிவியில் பார்க்கலாம்
இந்த தொடக்க விழாவை டிவியில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்கிறார்கள். 32 நாடுகளில் இதைப் பார்க்கலாம். சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் சேனல்களில் ஏப்ரல் 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு தொடங்குமாம்.


Click it and Unblock the Notifications