Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது குஜராத் அணி.. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் செய்த மேஜிக்.. என்ன ஆனது?

கொல்கத்தா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியது.

Recommended Video

IPL 2022 முதல் அணியாக Final சென்ற Gujarat Titans | #Cricket

ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சிறப்பான பேட்டிங் செய்தது.

ராஜஸ்தானின் இன்னிங்ஸ்

ராஜஸ்தானின் இன்னிங்ஸ்

ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். எனினும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் விளாசி ரன் வேட்டை நடத்தினார். 26 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை சேர்த்து அவுட்டானார். அவருக்கு உறுதுணையாக ஜாஸ் பட்லர் நிதானமாக ஆடி வந்தார்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

42 பந்துகளில் ஜாஸ் பட்லர் நிதானமாக அரைசதமடித்திருந்தார். சஞ்சு சாம்சன் சென்ற பிறகு ஹெட்மெயர் (4), ரியான் பராக் (4) என அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது. நிலைமையை அறிந்த ஜாஸ் பட்லர் தனது கியரை மாற்றினார். அரைசதத்திற்கு பிறகு சிக்ஸர் மழை காட்டினார். இதன் விளைவாக 56 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 89 ரன்களை அடித்து அணியை காப்பாற்றினார். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது.

குஜராத் இன்னிங்ஸ்

குஜராத் இன்னிங்ஸ்

189 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி தான். ஓப்பனிங் வீரர் விருதிமான் சாஹா டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - மேத்யூவ் வேட் ஜோடி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 0/1 என இருந்த ஸ்கோர் 72 /2 என மாறியது. இருவருமே 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கில்லர் மில்லர்

கில்லர் மில்லர்

குஜராத் அணி 85 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி காப்பாற்றினர். இருவருமே கிடைக்கும் சமயங்களில் பவுண்டரிகளை விளாசி ரன்வேகத்தை உயர்த்தினர். எனினும் கடைசி சில ஓவர்களில் ராஜஸ்தான் அணி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். மில்லர் 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களை கடந்து சிறப்பான ஃபார்மில் இருந்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதனால் கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. பிரஷித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் வந்தது. இதனால் அடுத்த 5 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. மைதானம் முழுவதும் பெரும் பரபரப்பு இருந்த போது, அடுத்த 2 பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசினார் மில்லர். இதனால் 19.3 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஸ்கோர் போர்ட்

ஸ்கோர் போர்ட்

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 38 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்களை சேர்த்தார். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 40 ரன்களை சேர்த்தார்.

Story first published: Tuesday, May 24, 2022, 23:50 [IST]
Other articles published on May 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+