Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பிளே ஆஃப் இன்று நடைபெறுமா? கொல்கத்தாவின் வானிலை அறிக்கை.. பிட்ச் ரிப்போர்ட் வெளியானது

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

IPL 2022 Playoffs போட்டிகள் இன்று தொடக்கம்.. மழையால் போட்டி பாதிக்கப்படுமா ? #Cricket

இந்தப் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. இறுதிப் போட்டிக்கு முதலாவது செல்வது குஜராத்தா அல்லது ராஜஸ்தானா என்று இன்று தெரிந்துவிடும்.

ஆனால் இன்று போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், கொல்கத்தாவில் யாரும் எதிர்பாராத வகையில், கோடைக் காலத்தில் மழை பெய்து வருகிறது.

கொல்கத்தா வானிலை

கொல்கத்தா வானிலை

இந்த நிலையில், இன்று கொல்கத்தாவில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில் வெயில் கொஞ்சம் தலைக்காட்டும். ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மைதானம்

மைதானம்

இதனால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் தார் பாயால் மூடப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தில் மழை நீங் தேங்க வாய்ப்பில்லை. மேலும், மழை நீர் செல்ல சிறந்த வடிக்கால் வசதியுள்ளது. இதனால் மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது.

குஜராத்துக்கு சாதகம்

குஜராத்துக்கு சாதகம்

ஆனால் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்படலாம். ஒரு வேலை ஆட்டம் பாதிக்கப்பட்டால் கூடுதல் நாள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் புள்ளி பட்டியலில் முதன்மையாக இருக்கும் அணியான குஜராத் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்படும்.

காலையில் மழை இல்லை

காலையில் மழை இல்லை

ஆனால் ராஜஸ்தான் அணிக்கு குவாலிபையர் 2வில் விளையாட மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். தற்போது காலை நேரத்தில் கொல்கத்தாவில் மழை பெய்யவில்லை. மதியத்துக்கு பிறகு தான் மழை எதிர்பார்க்கலாம். ஒரு வேலை மழை இல்லை என்றால், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும். இதனால் ரசிகர்கள் மழை கொல்கத்தாவில் பெய்ய கூடாது என வேண்டி வருகின்றனர்.

Story first published: Tuesday, May 24, 2022, 11:13 [IST]
Other articles published on May 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+