For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று இன்று முதல் தொடங்கும் நிலையில், அதில் படைக்கப்பட்டுள்ள ரெக்கார்ட்ஸை பற்றி காணலாம்.

நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் பெங்களூரு அணியை தவிர மற்ற 3 அணிகளும் தற்போது தான் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணி 2008ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றாலும், பிளே ஆப் முறை கொண்டு வரப்பட்ட பிறகு இப்போது தான் தகுதி பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சுரேஷ் ரெய்னா. இதுவரை 714 ரன்கள் அடித்துள்ளார். 2வது இடத்தில் தோனி 522 ரன்களும், வாட்சன் 389 ரன்களும், மைக்கேல் ஹஸி 388 ரன்களும், முரளி விஜய் 364 ரன்களும், டுவைன் ஸ்மித் 356 ரனிகளும், டுபிளஸிஸ் 348 ரன்களும், பொலார்ட் 341 ரன்களும் அடித்துள்ளனர்.

அதிக வெற்றி

அதிக வெற்றி

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணி என்றால் அது சிஎஸ்கே தான். 11 முறை சிஎஸ்கே அணியும், மும்பை 9 முறையும், ஆர்சிபி 8 முறையும், கொல்கத்தா 7 முறையும் தகுதி பெற்றுள்ளன, இதில் அதிக வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதிக வெற்றி சதவீதம் என்று பார்த்தால், மும்பை அணி 66.67 என்று முதலிடத்திலும், சிஎஸ்கே 62.50 என 2வது இடத்திலும் உள்ளது.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பிராவோ 28 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 18 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 17 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், ஜடேஜா 16 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், ஆல்பி மார்க்கல்இ மலிங்கா தலா 14 விக்கெட்டுகள் எடுத்து 5வது இடத்திலும், 6வது இடத்திலும் உள்ளனர்.

அதிக சாதனை

அதிக சாதனை

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அதிக முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற பெருமையை அஸ்வின் மற்றும் பிராவோ பெற்றுள்ளனர். ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை ரெய்னா பெற்றுள்ளார். நடப்பு பிளே ஆப்பில் களமிறங்கும் வீரர்களிடையே, ஹர்திக் பாண்டியாவும், குர்னல் பாண்டியாவும் மட்டும் தான் அதிக பிளே ஆப்பில் வெற்றியை பெற்றவர்கள் என்ற பெருமையை வகித்துள்ளனர்.

Story first published: Tuesday, May 24, 2022, 16:47 [IST]
Other articles published on May 24, 2022
English summary
IPL Playoff Records and History – Most runs and Most wickets ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+