Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு திமிர் ஆகாது.. அஸ்வினை முறைத்த ரியான் பராக்.. ரசிகர்கள் கடும் கண்டனம்

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் தனது திமிர்த்தனமான செயல் மூலம் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்கும் தான் திமிர் இருக்கும். ஆனால் ரசிகர்கள் அதனை விரும்பினார்கள்,. ரியான் பராக் மீது மட்டும் கோபம் ஏன் என்று தெரியுமா?

Recommended Video

Ashwin-ஐ முறைத்த Riyan Parag.. ரசிகர்கள் கடும் கண்டனம் #Cricket | Oneindia Tamil

விராட் கோலி தனது திறமையை நிரூபித்து பேட்டால் ரன்களை அடித்து திமிராக நடந்து கொள்வார். ஆனால் ரியான் பராக் திறமை இருந்தாலும் இதுவரை சர்வதேச அளவில் நிரூபித்தது இல்லை.

திமிரான வீரர்

திமிரான வீரர்

அப்படி இருக்கும் போது திமிராக நடந்து கொள்வது, கேட்ச் பிடிக்கும் போது சேட்டை செய்வது, நடுவரை முறைப்பது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வருகிறார். இது குறித்து ரசிகர்கள் பலரும், ஏன் மேத்தீவ் ஹைடனும் அறிவுரை அளித்த பிறகும் திமிராக தான் ரியான் பராக் நடந்து கொள்கிறார்.

ரன் அவுட்

ரன் அவுட்

நேற்றைய ஆட்டத்தில் கூட அஸ்வினும், ரியான் பராக்கும் களத்தில் நின்றனர். அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தை எதிர்கொள்ளும் போது பந்து பேட்டில் படால் ஓயிடாக வீசப்பட்டு, அது நேராக விக்கெட் கீப்பரடம் சென்றது. ஆனால் ரியான் பராக் வேண்டுமேன்றே அஸ்வினை கேட்காமல் இல்லை தெரியப்படுத்தாமல் ரன் ஓடி ஆட்டமிழந்தார்.

அஸ்வினை முறைத்த பராக்

அஸ்வினை முறைத்த பராக்

இதில் அஸ்வின் மீது துளியும் தவறு இல்லை. ஆனால் ரியான் பராக், ஆட்டமிழந்ததும் அஸ்வினை முறைத்து பார்த்து சென்றார். இதனை அஸ்வின் கண்டுகொள்ளவில்லை என்றாலும், பலரும் ரியான் பராக் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ரியான் பராக் களத்தில் நடந்து கொள்ளும் விதம் அவருக்கு கேடாக முடியும் என்றும், இது அவருக்கு நன்மையை தராது என்றும் விமர்சித்தனர்.

சூர்யகுமார் கிண்டல்

சூர்யகுமார் கிண்டல்

கேட்ச் பிடித்து செல்பி எடுப்பது போல் செய்வது எல்லாம் கூட மன்னித்துவிடலாம். ஓட வாய்ப்பே இல்லாத இடத்தில் ரன் ஓடி தவறு செய்துவிட்டு, அஸ்வினை முறைப்பது எல்லாம் எந்த விதத்திலும் சரியே கிடையாது. ரியான் பராக் விராட் கோலியின் ரசிகர். இதனால் அவர் போல் நடப்பதாக நினைத்து கொண்ட வெறுப்பையே சம்பாதித்து கொள்கிறார். இந்த நிலையில், ரியான் பராக் களத்தில் மிமிருடன் நடப்பது குறித்து சூரியகுமார் யாதவ் கிண்டலுடன் டிவிட் போட்டு இருந்தார்.

Story first published: Wednesday, May 25, 2022, 12:06 [IST]
Other articles published on May 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+