Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா? கட்டத்திற்கு சென்ற மும்பை.. ஒரு தோல்வி அடைந்தாலும் Bye! bye! சிஎஸ்கேவும் சரிந்தது

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி கடும் சரிவை சந்தித்திருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை மும்பை அணி தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கி டெல்லி அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போராடி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் வரை எடுத்து தோல்வியை தழுவியது.

IPL Points table 2024- Delhi capitals win made serious problem for Mumbai indians

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது தோல்வியை பெற்றிருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, ஆறு தோல்வி என ஆறு புள்ளிகள் உடன் ரன் ரேட் மைனஸ் 0.26 என்ற லெவலில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கீழே ஆர்சிபி அணி மட்டும்தான் இருக்கிறது.

ஆர்சிபி ஒன்பது போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி 7 போட்டிகளில் தோல்வி என 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருக்கிறார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்வா? சாவா என்ற கட்டத்திற்கு சென்றுவிட்டது. மும்பை இந்தியன்ஸ் எஞ்சி உள்ள ஐந்து போட்டிகளில் ஐந்து நிலை வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

அப்படி இல்லாத பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளின் தயவை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்தபட்சம் 3 அல்லது 4 போட்டிகள் ஆவது வெல்ல வேண்டும். இந்த நிலையில் டெல்லி அணியின் வெற்றி சிஎஸ்கேவுக்கும் சரிவை கொடுத்திருக்கிறது.டெல்லி அணி இந்த போட்டிக்கு முன்பு ஆறாவது இடத்தில் இருந்தது.

தற்போது அவர்கள் ஐந்தாவது வெற்றியைப் பெற்று 10 புள்ளிகளை பெற்று அடைந்து விட்டார்கள். இதனால் டெல்லி அணி தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஐந்தாவது இடத்திலிருந்த சிஎஸ்கே அணி தற்போது ஆறாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றார் மட்டுமே மேலே செல்ல முடியும். எனினும் டெல்லி அணி 10 போட்டிகள் விளையாடி இருக்கிறது. சென்னை அணி எட்டு போட்டிகள் தான் இதுவரை விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 27, 2024, 22:14 [IST]
Other articles published on Apr 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+