IPL Points table - சரியான நேரத்தில் உதவி.. சிஎஸ்கேவை காப்பாற்றிய டெல்லி அணி.. சரிந்த லக்னோ
லக்னோ : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிட்டத்தட்ட பாதி கிணறை தாண்டிவிட்டது.26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியல் எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
லக்னோவில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் டெல்லி அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.இதன் மூலம் கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது முன்னேற்றத்தை கண்டு இருக்கிறது.

டெல்லி அணி லக்னோவை வீழ்த்தியிருப்பது, சிஎஸ்கேவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. லக்னோ அணி மூன்றாம் இடத்தில் இருந்தது. தற்போது டெல்லிக்கு எதிராக லக்னோ அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணியின் ரன் ரேட் 0.43 என்ற அளவில் சரிந்து இருக்கிறது.
இதனால் நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகள் உடன் ரன் ரேட் 0.66 என்ற நிலையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான அணி 5 போட்டி விளையாடி 8 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் கே கே ஆர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு புள்ளிகளுடன் இரண்டவது இடத்திலும் உள்ளது.
சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ நான்காவது இடத்திலும் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆறாவது இடத்தில் குஜராத் அணி ஆறு போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் உள்ளது. ஏழாவது இடத்தில் உள்ள மும்பை அணி நான்கு புள்ளிகள் உடன் உள்ளது.
எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் இருக்கிறது. டெல்லி அணி தற்போது இரண்டாவது வெற்றியை பெற்று ஒன்பதாவது இடத்திலும், ஆர்சிபி அணி இரண்டு புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறது. ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications