For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Points table - லக்னோவின் வெற்றியால் சரிந்த சிஎஸ்கே.. மேலே எறி வந்த மும்பை இந்தியன்ஸ்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தற்போது 21 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற டெல்லி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இரவு நேரத்தில் லக்னோ, குஜராத் அணிகள் மூவி ஆட்டத்தில் குஜராத் அணி முதல் முறையாக லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த இரு போட்டிகளின் முடிவும் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

IPL Points table 2024 - Lucknow Jumps in to 3rd position as csk drops in to fourth

இதன் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவர்கள் நான்கு போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, மூன்று தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய ரன் ரேட் மைனஸ் 0. 70 என்ற லெவலில் இருக்கிறது.

இதேபோன்று லக்னோ அணி தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் தற்போது அவர்கள் மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அவர்களுடைய ரன் ரேட் 0.77 என்ற அளவில் இருக்கிறது.

இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நான்காவது இடத்திற்கு சரிந்து இருக்கிறார்கள். சென்னையில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் ரன்ரேட் 0.51 என்ற அளவில் இருக்கிறது. தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது.இவர்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 1.12 என்ற ரன் ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

கே ஆர் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி என ஆறு புள்ளிகள் ரன்ரேட் 2.51 என்ற லெவலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.3வது இடத்தில் லக்னோவும், நான்காவது இடத்தில் சிஎஸ்கேவும், ஐந்தாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் பஞ்சாப் அணியும் ஏழாவது இடத்தில் குஜராத்தும், எட்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ், ஒன்பதாவது இடத்தில் ஆர்சிபி அணியும் 10-வது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது.இந்த நிலையில் திங்கள்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் சென்னை வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, April 8, 2024, 0:09 [IST]
Other articles published on Apr 8, 2024
English summary
IPL Points table 2024 - Lucknow Jumps in to 3rd position as csk drops in to fourth IPL Points table - லக்னோவின் வெற்றியால் சரிந்த சிஎஸ்கே.. மேலே எறி வந்த மும்பை இந்தியன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+