Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் புள்ளி பட்டியல் - பஞ்சாப் அணியால் தப்பித்த சிஎஸ்கே.. இல்லனா சங்கு தான்!

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது 23 லீக் ஆட்டம் இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் 182 ரன்கள் குவித்த நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது கடுமையாக தடுமாறியது. 58 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. இதனால் மிகப்பெரிய தோல்வியை பஞ்சாப் அணி சந்திக்க இருந்தது.

IPL Points table 2024 - Punjab Kings saved CSK after brilliant batting performance

ஒருவேளை இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது. புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை தாண்டி நான்காவது இடத்திற்கோ இல்லை லக்னோவை தாண்டி மூன்றாவது இடத்திற்கோ சென்று இருக்க கூடும். ஆனால் பஞ்சாப் அணியில் உள்ள இரண்டு இளம் சிங்கங்கள் பட்டையைக் கிளப்பி சன்ரைசஸ்க்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதன் காரணமாக பஞ்சாப் அணி வெற்றியின் அருகே வரை வந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 6 புள்ளிகளை பெற்றாலும் அவர்களால் ரன் ரேட்டில் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை.

இதன் காரணமாக புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி தற்போது வெற்றி பெற்ற ஐந்தாவது இடத்திலே நீடிக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தங்களுடைய நான்காவது இடத்தை பத்திரமாக பிடித்துக் கொண்டது. தற்போது புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், 6 புள்ளிகளுடன் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

லக்னோ, சிஎஸ்கே,சன்ரைசர்ஸ் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், குஜராத் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் மும்பை இரண்டு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திலும், ஆர் சி பி 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், டெல்லி 2 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளது.

Story first published: Wednesday, April 10, 2024, 8:05 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+