Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - புள்ளி பட்டியலில் சரிந்த ஆர்சிபி.. லக்னோவின் வெற்றியால் சிஎஸ்கேக்கு ஆபத்து..கடைசி 2 இடம் யாரு?

பெங்களூர் : ஐபிஎல் புள்ளி பட்டியலில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி தற்போது அடி பாதாளத்தில் சரிந்து கிடக்கின்றது. இதேபோன்று தற்போது இரண்டாவது வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி முன்னேற்றத்தைக் கண்டதுடன் மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்கும் ஆபத்தாக வந்து நிற்கிறது.

தற்போது 15 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் புள்ளி பட்டியலில் எந்த அணிகள் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

IPL Points table 2024 - RCB dropped to bottom with Mumbai indians


இரண்டாவது இடத்தில் கே கே ஆர் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் உள்ளது. நடப்பு சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி ஒரு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் ரன் ரேட் 0.97 என்ற நிலையில் இருக்கிறது.

தற்போது ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. லக்னோ அணியின் ரன் ரேட் 0.48 என்ற நிலையில் இருக்கிறது. குஜராத் அணியும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி ஒரு தோல்வி என ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.ஆனால் அவர்களுடைய ரன் ரேட் மைனஸ் 0.73 என்ற நிலையில் உள்ளது.

6,7,8 ஆகிய இடங்களில் முறையே சன்ரைசர்ஸ், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் இருக்கிறது. இந்த மூன்று அணிகளுமே மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி இரண்டு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் உள்ளனர். ஆர் சி பி அணி மட்டும் நான்கு போட்டிகள் இருக்கிறது.

அவர்கள் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு புள்ளிகள் உடன் மைனஸ் 0.87 என்ற ரன் ரேட் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டியுமே தோல்வியை தழுவி மைனஸ் ஒன்னு புள்ளி 42 என்ற ரன் ரேட் உடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, April 3, 2024, 7:04 [IST]
Other articles published on Apr 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+