Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பிக்சிங்.. 170 பக்க விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்!!

டெல்லி: 6வது ஐபிஎல் போட்டிகளின் போது நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக நீதிபதி முட்கல் கமிட்டி 4 மாத கால விசாரணை நடத்தி 170 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பிக்சிங் மற்றும் பெட்டிங் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகிய 3 வீரர்கள் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

குருநாத், ராஜ்குந்த்ரா

குருநாத், ராஜ்குந்த்ரா

மேலும் பெட்டிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோரும் சிக்கினர்.

நிரபராதிகள்- நீதிபதிகள் கருத்து

நிரபராதிகள்- நீதிபதிகள் கருத்து

ஆனால் கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் இவர்களுக்கும் பிக்சிங்குக்கும் தொடர்பும் இல்லை என்று கூறியது.

பீகார் சங்கம் வழக்கு

பீகார் சங்கம் வழக்கு

இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஐ.பி.எல். பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை கமிஷனை உச்சநீதிமன்றம் அமைத்தது.

முகுல் முட்கல் கமிட்டி

முகுல் முட்கல் கமிட்டி

கடந்த 4 மாதங்களாக நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள், போலீசார் ஆகியோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

170 பக்க விசாரணை அறிக்கை

170 பக்க விசாரணை அறிக்கை

4 மாத விசாரணைக்குப் பின்னர் இன்று தமது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன்பு முகுல் முட்கல் குழு தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை 170 பக்கங்கள் கொண்டது.

குருநாத் பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மை

குருநாத் பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மை

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்றும் ரகசிய தகவல்களை பரிமாறினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூடுதல் விசாரணை அவசியம்

கூடுதல் விசாரணை அவசியம்

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா மீதான புகார் குறித்து கூடுதல் விசாரணை தேவை என்றும் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்வைஸ் செய்யனும்..

அட்வைஸ் செய்யனும்..

அத்துடன் மூத்த வீரர்களான டெண்டுல்கர், டிராவிட் போன்றோர் இளம் வீரர்களுக்கு இந்த விவகாரத்தில் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் விசாரணை கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. 7வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பிக்சிங் விசாரணை அறிக்கை தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 10, 2014, 15:04 [IST]
Other articles published on Feb 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+