Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்... ஐபிஎல்லிலிருந்து விலகல் முடிவு

சௌதாம்டன் : இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பௌலர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல்லிலிருந்து விலகியுள்ளார்.

Recommended Video

IPL 2020 Schedule நாளை வெளியீடு: Ganguly அறிவிப்பு | OneIndia Tamil

அவருக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் தன்னுடைய மனைவியுடன் தான் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

IPL pull-out was difficult but right decision -Kane Richardson

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய லெக் -ஸ்பின்னர் ஆடம் ஜம்பா விளையாடவுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார் ஆஸ்திரேலிய பௌலர் கேன் ரிச்சர்ட்சன். ஆனால் அவர் அணியில் மட்டுமின்றி இந்த சீசனிலேயே பங்கேற்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தன்னுடைய முதல் குழந்தை அந்த நேரத்தில் பிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த நேரத்தில் தன்னுடைய மனைவியுடன் தான் இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இங்கிலாந்து டி20 தொடருக்காக அங்குள்ள ரிச்சர்ட்சன், இந்த மாதத்திற்குள் அந்த தொடரையும் அதையடுத்து குவாரன்டைனையும் முடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவிடுவார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆஸ்திரேலிய லெக் -ஸ்பின்னர் ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டுள்ளதாக ஆர்சிபி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது என்பது மிகவும் கடினமான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 3, 2020, 15:44 [IST]
Other articles published on Sep 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+