Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னிக்காவது ஜெய்ப்பீங்களா மும்பை பங்காளி.. சாதனை படைத்த ஷிகர் தவான்.. பும்ராவின் மிரட்டல் யாக்கர்

புனே: ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த தொடரில் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வியை தழுவிய மும்பை, முதல் வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் மும்பை 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது.

மும்பைக்கு நெருக்கடி

மும்பைக்கு நெருக்கடி

இதனையடுத்து பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில், பஞ்சாப் அணி தொடக்க வீரர் மாயங் அகர்வாலும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அகர்வால் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷிகர் தவானும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பைக்கு நெருக்கடி தந்தார்.

97 ரன் பார்டனர்ஷிப்

97 ரன் பார்டனர்ஷிப்

மாயங் அகர்வால் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்களை சேர்த்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ்டோ 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டோனை அதிரடி யாக்கர் மூலம் கிளின் போல்ட் ஆக்கினார் பும்ரா.இதனால் பஞ்சாப் அணி சற்று தடுமாறியது.

ஷிகர் தவான் சாதனை

ஷிகர் தவான் சாதனை

எனினும் ஷிகர் தவான் 45வது ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல் 50 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 800 பவுண்டரிகளை விளாசி ( 4 மற்றும் 6) ஷிகர் தவான் சாதனை படைத்தார். மேலும் மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை ஷிகர் முறியடித்தார்.

Recommended Video

IPL 2022 | CSK-க்கு இது வெறும் தொடக்கம் தான்... இனி தான் சவால் இருக்கு
199 ரன்கள் இலக்கு

199 ரன்கள் இலக்கு

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அதிரடியை காட்டினார். உனாட்கட் வீசிய ஓரே ஓவரில் 20 ரன்களுக்கு மேல் பறந்தது. ஷாரக்கானும் 2 சிக்சர்களை பறக்கவிட பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை தரப்பில் பாசிம் தம்பி 2 விக்கெட்டையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Story first published: Wednesday, April 13, 2022, 22:03 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+