Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ப்ளான் சக்சஸ்” டாஸில் தோற்றாலும் ஆர்சிபிக்கு அடித்த லக்.. எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம்?

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்கு தொடக்கமே சிறப்பாக தான் அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

டாஸில் ட்விஸ்ட்

டாஸில் ட்விஸ்ட்

இந்த போட்டியில் டாஸில் தோல்வியடைந்த போதும் ஆர்சிபி அணியின் ப்ளான் வெற்றிகரமாக அமைந்துள்ளது. பவுலிங் தேர்வு செய்தது குறித்து பேசியிருந்த சஞ்சு சாம்சன், பிட்ச்-ல் பவுலர்களுக்கு சற்று சாதகம் உள்ளது. எனவே முதலில் பவுலிங் செய்து ஸ்கோரை குறைக்க பார்க்கிறோம் எனக்கூறினார். எனினும் டூப்ளசிஸ் அப்படியே மாறாக கூறியுள்ளார்.

ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்

ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்

அதாவது, நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தான் செய்ய நினைத்தோம். தற்போது அதுவே வந்துவிட்டது. ஏனென்றால் முக்கியமான போட்டிகளில் முதலில் ஆடி நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் 2வது இன்னிங்ஸில் அழுத்தம் காரணமாக ரன் அடிக்க முடியாது எனக்கூறினார். அவர் கூறியதை போன்றே கடந்த போட்டியில் ஆர்சிபி முதலில் நல்ல இலக்கை நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு அடித்தால் வெற்றி

எவ்வளவு அடித்தால் வெற்றி

போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் சற்று தூரமாக உள்ளன. பிட்ச்-ல் புற்களும் ஓரளவிற்கு இருப்பதால் பேட்டிங்கிற்கு உதவக்கூடும். இந்த பிட்ச்-ல் முதலில் ஆடும் அணி 180 ரன்கள் அடித்தாலே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

ஆர்சிபி அணி : விராட் கோலி, டூப்ளசிஸ், ராஜத் பட்டிதார், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சபாஷ் அகமது, வானிண்டு ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜோஸ் ஹாசல்வுட், முகமது சிராஜ்

ராஜஸ்தான் அணி : யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுவேந்திர சாஹல்

Story first published: Friday, May 27, 2022, 19:31 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+