For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும் ஆட்டமே மாறி இருக்கும்.. பட்லர் செய்த சாகசம்

அகமதாபாத்: ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் பிடித்த ஒரே கேட்ச்சால் ஆட்டம் ராஜஸ்தான் கட்டுக்குள் வந்தது.

டாஸ வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது களத்துக்கு வந்தார் ரஜத் பட்டிதார். ரஜத் பட்டிதார் என்ற பெயரை எந்த ஆர்சிபி ரசிகர்களும் அவ்வளவு சீக்கிரம் மறந்த இருக்க மாட்டார்கள்.

ரஜத் பட்டிதார்

ரஜத் பட்டிதார்

ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் பெங்களூரு விளையாடுகிறது என்றால் அதற்கு காரணம் ரஜத் பட்டிதார் தான். எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.

பயம் காட்டிய பட்டிதார்

பயம் காட்டிய பட்டிதார்

இதே போன்ற ஆட்டத்தை ரஜத் பட்டிதார் இன்றும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பட்டிதார் பவுண்டரிகளை விரட்டி அதிரடியாக விளையாடினார். எனினும் இந்த மைதானம் கொஞ்சம் பெரியது என்பதால், அவரால் ரன் மழை பொழிய முடியவில்லை. இருப்பினும், அவ்வப்போது பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார்.

அஸ்வின் மாயஜாலம்

அஸ்வின் மாயஜாலம்

இதனால் இன்றைய ஆட்டத்திலும் பட்டிதார் அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து அரைசதத்தை சதமாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கினார். அதற்கான களமும் அமைந்தது. எனினும் அஸ்வின் வீசிய பந்தை தூக்கி பட்டிதார் அடித்தார். ஆனால் அதனை எல்லை கோட்டில் நின்று பட்லர் பிடித்தார். பிறகு எங்கே கால் எல்லை கோட்டில் பட்டு விடுமோ என்று பந்தை தூக்கி போட்டு மீண்டும் கேட்ச் பிடித்தார்.

மிரட்டல் கேட்ச்

மிரட்டல் கேட்ச்

இதனையடுத்து இது கேட்ச் தானா என்று நடுவர் மறு ஆய்வு செய்தனர். அதில் பட்லர் எல்லை கோட்டில் மிக அருகில் நின்றும், எல்லை கோட்டில் காலில் படாமல், நின்று அபாரமாக கேட்சை பட்லர் நிறைவு செய்தார். இதனையடுத்து பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் பிறகு ராஜஸ்தான் அணி பக்கம் ஆட்டம் திரும்பியது.

Story first published: Friday, May 27, 2022, 21:36 [IST]
Other articles published on May 27, 2022
English summary
IPL Qualifier 2 – Jos Buttler brilliant catch made Rajat patidar out for 58 runs ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும் ஆட்டமே மாறி இருக்கும்.. பட்லர் செய்த சாகசம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+