Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் காலை வாரிய கோலி.. மீண்டும் அதே மாதிரி அவுட்.. செம கடுப்பான ரசிகர்கள்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு விராட் கோலி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

நடப்பு சீசனில் விராட் கோலியின் ஃபார்ம் ரசிகர்களை வேதனை அடைய செய்தது. இந்திய அணியில் அவரது இடத்துக்கே ஆபத்து வரும் வகையில் விளையாடினார்.

முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே சீசனில் 3 முறை கோல்டன் டக் ஆனார். எனினும் விராட் கோலி முக்கிய கட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார்.

கோலி இன்னிங்ஸ்

கோலி இன்னிங்ஸ்

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதனால் கோலி ஃபார்ம்க்கு திரும்பியதாக ரசிகர்கள் நம்பினர். ஆனால் லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கோலி அடித்த சிக்ஸ்

கோலி அடித்த சிக்ஸ்

எப்போதும் முக்கிய ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் ஒரு ஸ்பெஷல் இன்னிங்சை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தால் போல், டிரெண்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் கடைசி பந்தில் கோலி இறங்கி வந்து சிக்சர் விளாசினார். இதனால் தலைவன் மீண்டும் திரும்பிட்டான் டா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் போட்டு முடிப்பதற்குள் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

விராட் கோலிக்கு ஆறாவது ஏழாவது ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்துவீசினால் அவர் ஆட்டமிழந்து விடுவார். இப்படி தான் அவரை கடந்த சில காலமாக எதிரணி வீரர்கள் பொறி வைத்து பிடித்து வருகின்றனர். இந்தப் போட்டியிலும் அதே யுத்தியை பிரசித் கிருஷ்ணா பயன்படுத்தி, எலி போல் பொறியில் விராட் கோலி சிக்கினார்.

அமைதியான மைதானம்

அமைதியான மைதானம்

இதனால் மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்களும் அமைதி ஆகினர். முக்கிய ஆட்டத்தில் ஆட்டமிழந்த விரக்தியில் விராட் கோலியும் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். முக்கிய ஆட்டத்தில் சொதப்பியதால் அவரது ரசிகர்களும் கடுப்பாகினர். இதனையடுத்து பட்டிடார், டுபிளஸிஸ் ஜோடி அர்சிபி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

Story first published: Friday, May 27, 2022, 20:36 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+