மும்பை அணியை விட்டு வெளியேறிய மலிங்கா..வேறு அணிக்கு பயிற்சியாளராக சென்றது ஏன்? யாக்கர் கிங் ஓபன்டாக்
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சொத்தாக விளங்கியவர் மலிங்கா. ஆனால் இம்முறை மும்பை அணியை விட்டு விலகி ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
மும்பை அணியிலிருந்து விலகியது ஏன் என்ன காரணம் என்று குறித்து மனம் திறந்துள்ள மலிங்கா,
ராஜஸ்தான் அணி ரசிகர்களை பெருமைப்படுத்த உள்ளதாக கூறினார். அவர் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

புதிய பொறுப்பு
இது எனக்கு புதிய பொறுப்பு. இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை சொல்லி தருவது தான் என் வேலை.மும்பை அணியில் இந்த பணியை தான் செய்தேன். இப்போது ராஜஸ்தான் அணிக்கு செய்கிறேன். ராஜஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

விலகியது ஏன்
ராஜஸ்தான் அணியில் எனக்கு பிடித்ததே அவர்கள் ஜெர்சியின் நிறம் தான். அந்த பிங்க் நிறம் என்னை மிகவும் கவர்ந்தது. மும்பை அணியில் இருந்த போதே சங்ககாரா என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அழைத்தார். அப்போது கொரோனா, பயோ பபுள் போன்ற காரணத்தால் செல்லாமல் மனைவி, குழந்தையுடன் நேரத்தை செலவு செய்தேன்.

திறமையான வீரர்கள்
ஆனால் இப்போது இலங்கை அணிக்கும் இதே பணியை செய்வதால், சங்ககாரா அழைப்பை ஏற்று கொண்டேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுல்ட், கொல்டர் நைல் என 2 அதிவேக பந்துவீச்சாளர்களும், அவர்களுக்கு பக்க பலமாக பிரஷித் கிருண்ணா, நவதீப் சைனி ஆகியோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திறமையான வீரர்கள். இதனால் நாம் சொல்வதை அப்படியே செய்யக்கூடியவர்கள்.

மலிங்கா உறுதி
தற்போது அனைத்து அணிகளும் மற்ற அணிகளின் குறைகளை கவனித்து அதற்கு ஏற்றார் போல் தயார் ஆவார்கள். என்னை பொறுத்தவரை வெறும் 24 பந்துகள் தான் ஒவ்வொரு வீரரும் வீச வேண்டும். இதனால் நமது பலத்துக்கு ஏற்ப தான் நம் செயல்பட வேண்டும். இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடும். ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் நாங்கள் செயல்படுவோம்.


Click it and Unblock the Notifications