Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுடன் எப்போதும் துணை நிற்பேன்.. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் , பெங்களூருவில் உள்ளசின்னசாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் குறித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இந்த துயர சம்பவம், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறியது.

இது தொடர்பாக விராட் கோலி காலையில் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டனாக "நான் ஆர்சிபிக்காக ஒவ்வொரு முறையும் மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும்போது. ஆர்வத்துடன் இருக்கிறேன்."

a

"அந்த ஆர்வம் உங்களிடமிருந்து வருகிறது. உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு. நீங்கள் எப்போதும் எங்களுடன் நின்றிருக்கிறீர்கள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து, நாங்களும் உங்களுடன் நிற்கிறோம் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்."

"நீங்கள் அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கிறீர்கள். ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு, நாம் மீண்டும் நமது பலத்தை கண்டடைவோம்," என்று ரஜத் பட்டிதார் கூறினார். ஆர்சிபி கேர்ஸ்' என்ற முயற்சி மூலம், ரசிகர் பட்டாளத்தை வளர்ப்பது, வலுப்படுத்துவது மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிப்பது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது."

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முன்பு வாக்குறுதியளிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாய் நிதியுடன், முன்னர் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இந்த முயற்சி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஐபிஎல் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் ஆர்சிபி இணைந்து கொண்டுள்ளது.

Story first published: Wednesday, September 3, 2025, 23:59 [IST]
Other articles published on Sep 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+