சஞ்சு சாம்சன் தலையில் பயிற்சியாளர் குட்டுவார்..வறுத்து எடுத்த ரவி சாஸ்த்ரி.. எல்லை மீறும் விமர்சனம்?
மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி கேப்டனாக விளங்கும் சஞ்சு சாம்சனை ரவி சாஸ்த்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுவரை 124 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3161 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்களும் அடங்கும்.
இந்த நிலையில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கவனம் தேவை
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ரவி சாஸ்த்ரி, அறிவுரை என்ற பெயரில் சஞ்சு சாம்சனை திட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய ரவி சாஸ்த்ரி, சஞ்சு சாம்சன் தனது ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இந்த சீசனில் அவர் கொஞ்சம் பொறுமை காப்பதாக நினைக்கிறேன். அதற்கு காரணம் அவருடைய அனுபவமாக இருக்கலாம்.

அவசரம்
சஞ்சு சாம்சனிடம் ரன் குவிக்க பலவிதமான ஷாட்கள் உள்ளது தான் பிரச்சினையே. அவர் முதல் 5 ஓவரிலேயே அனைத்து ஷாட்களையும் ஆட வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் தான் அவர் விரைவாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புகிறார். எந்த பவுலரிடம் எந்த ஷாட் ஆடினால் நல்லது என்று விராட் கோலிக்கு தெரியும்.

குட்டு வைக்கனும்
அந்த கலையை சஞ்ச சாம்சன் கற்க வேண்டும். சஞ்சு சாம்சன் கிரிக்கெட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஒரே தவறையே சஞ்சு சாம்சன் திரும்ப திரும்ப செய்து தொடர்ந்து 20, 30 ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். சஞ்சு சாம்சன் தலையில் பயிற்சியாளர் குட்டு வைக்க வேண்டும். இதே போன்று நேற்று கேப்டன் பொறுப்பிலும் சஞ்சு சாம்சன் சொதப்பினார்.

ஃபில்டிங் தவறு
நேற்றைய ஆட்டத்தில் 14வது ஓவரில் அஸ்வின் ஓவரை தினேஷ் கார்த்திக் விளாசி தள்ளிவிட்டார். அப்போது ஒரு கேப்டனாக அடுத்த ஓவரை விக்கெட் எடுக்கும் வீரரான சாஹலிடம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் அனுபவம் இல்லாத சைனியிடம் வழங்கிவிட்டார். இதே போன்று கார்த்திக் ஆன் சைடில் பவுண்டரி லைனில் ஃபில்டரை சாம்சன் நிற்க வைக்காமல் தவறு செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications