Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - 10 பந்துகளில் ஆட்டத்தை திருப்பிய டுபிளஸிஸ்- சிக்சர்களை பறக்கவிட்ட ஆர்சிபி.. இமாலய இலக்கு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் 3வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி.

Recommended Video

PBKS vs RCB: New RCB captain Faf duPlessis shines with the bat on debut | Oneindia Tamil

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக மாயங் அகர்வாலும், பெங்களூரு அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் களமிறங்கினார்.

டி.ஓய். பாட்டில் மைதானத்தில் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டியில் வென்றுள்ளது.

அமைதியான தொடக்கம்

அமைதியான தொடக்கம்

இதனால் இலக்குகளை துரத்துவது எளிதானது என்பதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்தில் டுபிளஸிஸ் பொறுமையாக விளையாடினார். 11 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே டுபிளஸிஸ் அடிக்க, அதன் பிறகு தான் அதிரடியை தொடக்கினார்.

வீணான வாய்ப்பு

வீணான வாய்ப்பு

மறுமுனையில் தொடக்க வீரராக விளையாடிய 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி 3வது வீரராக களமிறங்கினார். இந்த நிலையில் டுபிளஸிஸ் 14 ரன்கள் எடுத்திருந்த போது அடித்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் அணியின் ஷாரூக்கான் தவறவிட்டார். பின் டுபிளஸிஸ் 19 ரன் அடித்திருந்த போது ரன் அவுட் வாய்ப்பை பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர்.

டுபிளஸிஸ் அதிரடி

டுபிளஸிஸ் அதிரடி

இதனையடுத்து டுபிளஸிஸ் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க கீர்களை மாற்றுவது போல் டுபிளஸிஸ் ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார் 34 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த டுபிளஸிஸ் அடுத்த 10 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். அதாவது 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இவருக்கு விராட் கோலி நல்ல உறுதுணையாக நின்று கம்பெனி கொடுக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் கடுமையாக உயர்ந்தது.

டுபிளஸிஸ் 88

டுபிளஸிஸ் 88

டுபிளஸிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் குவித்த போது அடித்த பந்தை ஷாரூக்கான் கேட்ச் பிடித்தார். அந்த கேட்சை ஷாரூக்கான் அப்போதே பிடித்திருந்தால் 74 ரன்களாவது பெங்களூரு அணியின் இறுதி ஸ்கோரிலிருந்து குறைந்திருக்கும். இந்த கேட்சின் போது விராட் கோலி மறுமுணைக்கு வந்துவிட, புதிய விதியின் படி அடுத்த வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கே பேட்டிங் செய்ய வந்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இறுதியில் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். 3 பவுண்டரி, 3 சிக்சர் என் பறக்கவிட்ட கார்த்திக், 14 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். விராட் கோலி தன் பங்கிற்கு 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி வீரர்கள் கடைசி 10 ஓவரில் 135 ரன்களை விளாசினர்.

Story first published: Sunday, March 27, 2022, 21:24 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+