மல்லையாவிடமிருந்து ரூ.300 கோடிக்கு கைமாறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!
பெங்களூர்: ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, மல்லையாவிடமிருந்து வாங்க ஜிந்தாலின், ஜேஎஸ்டபிள்யூ குரூப் முயன்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், கெய்ல் என ஸ்டார் பட்டாளத்தை கொண்டு அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
விஜய் மல்யாவின், யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டட் நிறுவனம்தான் இதுவரை அதன் உரிமையாளராகும். 8 சீசன்களிலும் தொடர்ந்து ஒரே உரிமையாளர் கையில் இருந்த இந்த நிறுவனம், தற்போது மல்யாவின் கைகளில் இருந்து மாறப்போகிறதாம்.

ஜிந்தால் நிறுவனம்
சஜ்ஜன் ஜிந்தாலை உரிமையாளராக கொண்ட ஜேஎஸ்டபிள்யூ குரூப் இந்த வர்த்தக பரிமாற்றம் குறித்து டியாஜியோ நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஏனெனில் டியாஜியோதான், யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டெட்டில் அதிக பங்குகளை வைத்துள்ள நிறுவனமாகும்.

உறுதி
"ஆம், பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். 250 முதல் 300 கோடி அளவுக்கு அணியை வாங்க பேரம் பேசப்பட்டு வருகிறது" என்று, ஜிந்தால் நிறுவன அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

காஸ்ட்லி அணி
111.6 மில்லியன் டாலருக்கு மல்யா இந்த அணியை, ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008ல் வாங்கினார். முகேஷ் அம்பானியின், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக காஸ்ட்லி அணியாக இரு கருதப்படுகிறது.

ஹைதராபாத்தை தொடர்ந்து
ஐபிஎல் அணிகளில் இதுவரை டெக்கான் ஜார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணி மட்டுமே உரிமையாளர் மாற்றத்துக்கு உள்ளானது. பிசிசிஐக்கு செக்யூரிட்டி பணமாக ரூ.100 கோடி அளிக்கவில்லை என்பதற்காக, சன் குரூப்பிற்கு அந்த அணி கைமாற்றப்பட்டு தற்போது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்று அழைக்கப்படுகிறது.

ஆர்சிபி ஆட்டம்
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை என்றபோதிலும், 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் பைனல் வரை வந்துள்ளது. இவ்வாண்டு நடந்து முடிந்த தொடரில், 3வதாக வந்தது அந்த அணி.


Click it and Unblock the Notifications