Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL RETENTION 2025- கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்.. ஷாரூக்கான் அணி கொடுத்த டிவிஸ்ட்

கொல்கத்தா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே நினைக்காத மிகப்பெரிய டிவிஸ்டை கே கே ஆர் அணி கொடுத்திருக்கிறது. கடந்த சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கேகேஆர் அணி வாங்கியது. எப்போதுமே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனால் இம்முறை கே கே ஆர் அணி சாம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இது மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அணியை விட்டு செல்ல போகிறேன் என்று போர் கொடி தூக்கிய ரஸில், தற்போது கே கே ஆர் அணியில் தொடர்கிறார்.

ipl retention ipl 2025 kkr andrew russell

இந்த நிலையில் கேகேஆர் அணி எந்த வீரர்களை தக்க வைத்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். அதன்படி கே கே ஆர் அணி தங்களுடைய முதல் வீரராக ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் வீரருக்கு 18 கோடி ரூபாய் வழங்கலாம் என்ற நிலை இருக்கும்போது 13 கோடி தான் கே கே ஆர் வழங்கி இருக்கிறது.

இதேபோன்று இரண்டாவது வீரராக தமிழக சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை 12 கோடி ரூபாய்க்கு கே கே ஆர் அணி தக்க வைத்து கொண்டுள்ளது. இரண்டாவது வீரருக்கு 14 கோடி வழங்கலாம் என்ற விதி இருக்கும் போது வருண் சக்கரவர்த்திக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது வீரராக சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சுனில் நரைனுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாய் கிடைக்கும் நிலையில் நரைன் தனக்கு ஒரு கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நான்காவது வீரராக ஆண்டரூ ரசூல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நான்காவது வீரருக்கு அதிகபட்சமாக 18 கோடி ரூபாய் வழங்கலாம் என்ற விதி உள்ள நிலையில், கேகேஆர் அணி ரஸில் 12 கோடி ரூபாய் மட்டுமே வழங்க உள்ளது.

இந்த நிலையில் கேகேஆர் அணி 2 uncapped வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன்படி வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் ஆகியோரை தலா 4 கோடி ரூபாய்க்கு கேகேஆர் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Story first published: Thursday, October 31, 2024, 18:36 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+