For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Retention 2025: அதிக சம்பளம் பெற்ற வீரர்கள் பட்டியலில் கோலியை முந்திய வெளிநாட்டு வீரர்

மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டன. அதில் எந்த வீரருக்கு அதிகபட்ச சம்பளம் அளிக்கப்பட்டது என்பதை பற்றி பார்க்கலாம். விராட் கோலி ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ரன் மெஷினாக அதிக ரன் குவித்து வருகிறார்.

அதனால் அவருக்கு இந்த முறை அதிகபட்ச சம்பளம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல அவருக்கு இந்த முறை 21 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. கடந்த முறை அவரது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவருக்கு 18 கோடி சம்பளம் அளித்து இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த சம்பளத்திலேயே விராட் கோலி நீடித்து வந்தார். தற்போது அவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

ipl 2025 chennai super kings 2025

ஆனால், அவரை விட வேறு ஒரு வீரருக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கு 23 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்பட்ட அதிக சம்பளம் ஆகும்.

மேலும், ஐபிஎல் வரலாற்றிலும் ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுவே ஆகும். இந்த முறை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் சம்பள பட்டியலில் அதிக சம்பளம் பெற்ற முதல் வீரராகவும் கிளாசன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளனர்.

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் அதிக சம்பளத்துக்கு தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் -

ஹென்ரிச் கிளாசன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 23 கோடி ரூபாய்
விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 21 கோடி ரூபாய்
நிக்கோலஸ் பூரன் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 21 கோடி ரூபாய்
ருதுராஜ் கெய்க்வாட் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 கோடி ரூபாய்
ரவீந்திர ஜடேஜா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 கோடி ரூபாய்
ஜஸ்பிரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ் - 18 கோடி ரூபாய்
சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 18 கோடி ரூபாய்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 18 கோடி ரூபாய்
பாட் கம்மின்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 18 கோடி ரூபாய்
ரஷீத் கான் - குஜராத் டைட்டன்ஸ் -18 கோடி ரூபாய்
அக்சர் பட்டேல் - டெல்லி கேப்பிட்டல்ஸ் - 16.5 கோடி ரூபாய்
சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 16.5 கோடி ரூபாய்
ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ் - 16.35 கோடி ரூபாய்
சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ் - 16.35 கோடி ரூபாய்
ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ் - 16.30 கோடி ரூபாய்

Story first published: Friday, November 1, 2024, 7:02 [IST]
Other articles published on Nov 1, 2024
English summary
IPL Retention 2025: Most Expensive retention ahead of IPL auction 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+