பெங்களூர் : ஐபிஎல் தொடரில் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஏழு அல்லது எட்டு வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நமது செய்தி தளத்தில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்க முடிவு செய்யும் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த சூழலில் ஆர்சிபி அணி எந்த வீரர்களை தக்க வைக்கும் எந்த வீரர்களை விடுவிக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் தவறான ஒரு யுத்தியை பயன்படுத்தி இருந்தது. எனினும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு வரை சென்றது.

இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த வீரர்களை ஆர்சிபி தக்க வைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணியின் ஸ்டார் வீரரும் கேப்டனுமான டுபிளசிஸ்க்கு வயது 40 ஆகிவிட்டது. இதனால் அவர் அந்த அணியில் தொடர்வது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர் அப்படி விளையாடினால் நிச்சயம் ஆர்சிபி அணி டுபிளசிசை தேர்வு செய்யும்.
ஆனால் முதல் வீரராக அந்த அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலிக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இதே போன்ற தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்று இருப்பதால் அவர் ஆர்சிபி அணியில் விளையாட மாட்டார். இரண்டாவது வீரராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
மூன்றாவது வீரராக வில் ஜாக்ஸ் என்ற வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. நான்காவது வீரராக அனுஜ் ராவத் அல்லது ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு ஆர்சிபி அணி வாய்ப்பு கொடுக்கும் என தெரிகிறது.மற்ற வீரர்களை தக்க வைக்கும் அளவுக்கு பெரிய ஸ்டார்கள் ஆர்சிபி அணிகளில் இல்லை.
இதனால் மேலே சொன்ன வீரர்களை தவிர மற்ற வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அணியை விட்டு அனுப்பி விட்டு,பெரிய தொகையுடன் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு வீரர்களை ஆர்சிபி அணி மீண்டும் புதிதாக வாங்கி பலப்படுத்தும் என தெரிகிறது.