Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retention 2026: எத்தனை மணிக்கு நடக்கும்.. எந்த சேனல், ஒடிடியில் பார்ப்பது? எந்த வீரர்கள் விடுவிப்பு

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் தக்க வைக்கப்படும் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து சீசனில் எந்த வீரர்கள் எந்த அணிக்காக விளையாட போகிறார்கள் என்பதற்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.

அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கும். அதற்கான இறுதிப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

IPL Retention 2026

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் கடைசி பந்து முடிவடைந்த உடன் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் வந்து சேர்ந்திருப்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அந்த வெளியிட்டு இருக்கிறது.

இதன் மூலம் ஜடேஜா மற்றும் ஷாம்கரன், ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளனர். கொல்கத்தா அணியை பொருத்தவரை வெங்கடேஷ் ஐயயரை அந்த அணி விடுவிக்கப் போகிறது. இதன் மூலம் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் அந்த அணிக்கு கிடைக்கும். அடுத்த சீசனிலும் ரகானே கேப்டனாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை விடுவிக்கும் என தெரிகிறது. ஆனால் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிகிறது. இதேபோன்று ஆருண் ஹார்டி, குல்தீப் சென், விஷ்ணு வினோத் ஆகியோர் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தங்களிடம் உள்ள பெரும்பான்மையான வீரர்களை தக்க வைக்க முடிவு செய்திருக்கிறது. தீபக் சாகர் வேறு அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தக்க வைக்கப்படுகிறார். லக்னோ அணி மாயங் யாதவை தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறது. ரவி பிஸ்னாய், டேவிட் மில்லர், ஆகாஷ் தீப் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.இதைப் போன்று ஆர்சிபி அணி லியான் லிவிங்ஸ்டோனை விடுவிக்க உள்ளது.

Story first published: Saturday, November 15, 2025, 10:57 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+