Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- தோனி சம்பளம் எவ்வளவு தெரியுமா? 46 வயது வரை சிஎஸ்கேவில் விளையாடுவது உறுதி.. எப்படி?

ஐபிஎல் 2025 ஆம் சீசனில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 43 வயதான தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் தான் களத்தில் செயல்படுகிறார்.

பெரிய அளவில் அவர் பேட்டிங்கில் விளையாடுவதில்லை. இதனால் தமது ஊதியத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் படி தோனி கூறியிருந்தார். ஆனால் தோனிக்கு குறைந்த சம்பளம் வழங்க வேண்டும் என்றால் அவர் இந்திய அணிக்காக விளையாடப்படாத வீரராக இருக்க வேண்டும்.

ms dhoni csk ipl 2025

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு விதியை மீண்டும் கொண்டு வர சிஎஸ்கே அணி வலியுறுத்தி இருந்தது. அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை இந்திய அணிக்காக விளையாடாத வீரராக கருதப்படலாம் என்று இருக்கிறது.

இதனை மீண்டும் கொண்டுவர சிஎஸ்கே வலியுறுத்திய நிலையில் அதற்கு பல அணிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தோனி விளையாடுவது ஐபிஎல் க்கு நல்ல விஷயம் என்று பிசிசிஐ தோனிக்காக இந்த விதியை மீண்டும் கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது. இந்த விதி வந்தால் தோனிக்கு வெறும் 4 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணியால் ஏலத்திற்கு முன்பே தக்க வைக்க முடியும்.

இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கையிருப்பு தொகை பெரிய அளவில் இருக்கும். இதை பயன்படுத்தி சிஎஸ்கே தாங்கள் நினைக்கும் வீரர்களை வாங்கலாம். எனினும் தோனி கடந்து 2020 ஆம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார் இதனால் ஆகஸ்ட் மாதம் 2025 ஆம் ஆண்டு வந்தால் தான் அவர் ஐந்து ஆண்டு நிறைவு செய்வார்.இதன் மூலம் தோனி இந்த விதிக்குள் வருவாரா இல்லையா என்பதை பிசிசிஐ தான் விளக்க வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் தோனி குறைந்த ஊதியத்தில் சிஎஸ்கே அணிக்காக மேலும் மூன்று ஆண்டுகள் விளையாட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் தான் இந்த பழைய விதியை பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடலாம் என அவர் நினைக்கின்றார்.இதேபோன்று தன்னுடைய உடல் தகுதியை பழைய படி கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தோனி எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Story first published: Saturday, August 17, 2024, 8:57 [IST]
Other articles published on Aug 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+