Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்? ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற திட்டம்?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு நடைபெறும் மெகா ஏலத்திற்கு ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சில அணிகள் சிலர் வீரர்களை மாற்றி அவருக்கு பதில் வேறு வீரர்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. சில அணிகள் ஒட்டுமொத்தமாக கேப்டனை மாற்றி புதிய வீரர்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முக்கிய வீரருமான சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

ipl 2025 ipl retention cricket sanju samson CSK

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினாலும், முக்கியமான காலகட்டங்களில் தோல்வியை தழுவுகின்றனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருந்து ராஜஸ்தான் அணி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. அதனால் சஞ்சு சாம்சனுக்கு பதில் வேறு ஒரு வீரரை கேப்டனாக கொண்டுவர ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முயற்சித்து வருவதாக தெரிகிறது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்சனை தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பண்டிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் டெல்லி அணி பண்டை விடுவிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது என்று சிஎஸ்கே அணி யோசித்து வருகிறது.

30 வயது ஆக இருக்கும் சந்து சாம்சன் இன்னும் ஐந்து ஆறு ஆண்டுகள் டி20 யில் விளையாடலாம். இதனால் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை உண்மையிலேயே விடுவிக்குமா இல்லை அப்படி விடுவிப்பது என்பது சரியான முடிவாக இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் சாம்சன் 15 போட்டிகளில் விளையாடி 531 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும். 2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் 362 ரன்களும், 2022 ஐ பி எல் தொடரில் 458 ரன்கள் சந்து சாம்சன் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 21, 2024, 17:17 [IST]
Other articles published on Aug 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+