Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 வீரர்களை மட்டுமே விடுவித்த பஞ்சாப், குஜராத்.. மாஸ் காட்டிய நெஹ்ரா, பாண்டிங்.. ஏன் தெரியுமா?

மும்பை: குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளில் இருந்து 5 வீரர்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத் அணியின் ரூ.12.9 கோடி பர்ஸ் தொகையுடனும், பஞ்சாப் அணி ரூ.11.5 கோடி பர்ஸ் தொகையுடனும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் அணி ரீடெய்ன் செய்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பஞ்சாப் அணி நிர்வாகம் மொத்தமாக 5 வீரர்களை மட்டுமே ரிலீஸ் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் இம்முறை ஆஸ்திரேலியா வீரர்களையே விடுவித்துள்ளார்.

IPL Retentions

அதன்படி பஞ்சாப் அணியில் இருந்து ஜோஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், குல்தீப் சென் மற்றும் பிரவீன் துபே ஆகியோரை விடுத்துள்ளனர். இதனால் பஞ்சாப் அணியின் கைகளில் ரூ.11.5 கோடி மட்டுமே இருக்கிறது. இதனால் பேக் அப் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பஞ்சாப் அணி ஐபிஎல் மினி ஏலத்தில் குறி வைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் குஜராத் அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும். இதுவரை ஆடியுள்ள 4 சீசன்களில் 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் குஜராத் அணி மினி ஏலத்தையொட்டி 5 வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் ஷனகா, லோம்ரோர், கரீம் ஜன்னத், கோட்ஸி மற்றும் கெஜ்ரோலியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குஜராத் அணியின் கைகளில் ரூ.12.9 கோடி இருக்கிறது. இதனை வைத்து சில பேக் அப் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கமாகவே நெஹ்ரா பெரியளவில் எந்த வீரரையும் விடுவிக்க மாட்டார். அது இந்த சீசனிலும் தொடர்வது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பஞ்சாப் அணியில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், பைலா அவினாஷ், ஹர்னூர் பன்னு, முஷீர் கான், விஷ்ணு வினோத், பிரப்சிம்ரன் சிங், மார்கோ யான்சன், ஸ்டாய்னிஸ், ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்கெ, மிட்சல் ஓவன், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்கூர், சேவியர் பார்ட்லெட், ஃபெர்குசன், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார்.

குஜராத் அணியில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள்: சுப்மன் கில், சாய் சுதர்சன், குமார் குசாக்ரா, அனுஜ் ராவத், பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான், ராகுல் டிவாட்டியா, ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, குர்னூர் சிங், மானவ் சுதார், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், அர்ஷ்த் கான், ரஷீத் கான்.

Story first published: Saturday, November 15, 2025, 18:36 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+