Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக ஊதியம்.. ரூ.21 கோடிக்கு விராட் கோலியை ரீடெய்ன் செய்த ஆர்சிபி.. முழு விவரம்!

பெங்களூர்: ஆர்சிபி அணிக்காக இந்திய அணியின் 3 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், இளம் வீரர் ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், அன்-கேப்ட் வீரரான யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், இன்று ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், இளம் வீரர் ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், அன்-கேப்ட் வீரரான யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ipl 2025 virat kohli rcb

இதன் காரணமாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான டூ பிளசிஸ், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும் மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியால் 3 வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்த முடியும். இந்த 3 வீரர்களை ரீடெய்ன் செய்ததன் மூலமாக ஆர்சிபி அணியின் பர்ஸ் தொகையில் ரூ.37 கோடி கழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரூ.120 கோடியில் ரூ.37 கழிக்கப்பட்டால், மீதமுள்ள ரூ.83 கோடியுடன் ஆர்சிபி அணியால் மெகா ஏலத்தை சந்திக்க முடியும். பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் உரிமையாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் விராட் கோலிக்கு பின் மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் இருவரை ஆர்சிபி அணி நிர்வாகம் வளர்க்க முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாகவே ரஜத் பட்டிதருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் அளிக்க முன் வந்துள்ளது. மேலும் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த அணி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மெகா ஏலத்திற்கு பின்னரே இது தொடர்பாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 31, 2024, 17:54 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+