Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு ஒரு நியாயம்? ரிஷப் பண்ட்க்கு ஒரு நியாயமா? பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. ரசிகர்கள் ஆவேசம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர்களின் நடத்தையால் சர்ச்சை வெடித்தது.

நேற்று டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.இதில் கடைசி ஓவரை மெக்காய் வீசினார்.

டெல்லி அணியின் போவெல் முதல் 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். இதில் 3வது பந்து கொஞ்சம் உயரமாக வந்ததால், இதனை நோ பாலாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி வீரர்கள் முறையிட்டனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

களத்தில் எதிர்முனையில் நின்ற குல்தீப் யாதவ் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அமிரே, களத்துக்குள் வந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். களத்துக்கு வெளியே நின்ற ரிஷப் பண்ட், போட்டியை விட்டு விலகி வருமாறு வீரர்களை அழைத்தார்.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அமிரேவுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடையும். போட்டிக்கான 100 சதவீதம் ஊதியத்தை அபராதமாக விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

தோனி செய்த சம்பவம்

தோனி செய்த சம்பவம்

இதே போன்று ரிஷப் பண்ட்க்கு போட்டிக்கான 100 சதவீதம் ஊதியமும், ஷர்துல் தாக்கூருக்கு 50 சதவீதமும் ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் இதே போன்று நோ பால் அறிவிக்கவில்லை. அப்போது தோனி களத்துக்கு உள்ளே வந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாரபட்சமான நடவடிக்கை?

பாரபட்சமான நடவடிக்கை?

ஆனால், தோனிக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 50 சதவீதம் தான் அபராதமாக விதிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், ரிஷப் களத்துக்கு வெளியே நின்று செய்ததற்கு 100 சதவீதம் அபராதமும், தோனியை போல் களத்துக்கு வந்த பிரவின் அம்ரேவுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடையும் விதித்து இருப்பது என்ன நியாயம் என்று டெல்லி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, April 23, 2022, 16:59 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+