Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கிட்ட ஒன்னு கேட்டேன்.. அவர் சொன்ன பதில் ஆச்சரியம்.. உத்தப்பா நெகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற பிறகு தோனியிடம் தாம் ஒரு கேள்வி கேட்டதை ராபின் உத்தப்பா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, அஸ்வினிடம் உரையாடினார். அப்போது இருவரும் சிஎஸ்கே அணி குறித்து உரையாடினர்.

அப்போது ராபின் உத்தப்பா, தோனியிடம் தமக்கு இருந்த நட்பு குறித்து பேசியது தான் ரசிகர்களிடம் தற்போது கவர்ந்துள்ளது.

IPL – Robin uthappa opens up about his friendship with MS Dhoni

நானும். தோனியும் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியில் விளையாடினோம். ஆனால் நான் தோனியுடன் விளையாடும் போது, அவர் சாதாரண வீரராக அணியில் இருந்தார். ஆனால் அதன் பிறகு பல உயரங்களை தொட்டுவிட்டார்.

நான் தோனியை மஹி என்று தான் அழைப்பேன். ஆனால் இப்போது அனைவரும் தோனியை மஹி பாய், பாய், கேப்டன் , பயா என்று அழைக்கிறார்கள். இதனால் எனக்கு அவரை மஹி என்று கூப்பிட கஷ்டமாக இருந்தது. பாய் என்றும் கூப்பிட முடியவில்லை.

இதனால் நானே தோனியிடம் கேட்டேன். எல்லாரும் உன்னை பாய் என்று அழைக்கிறார்கள். உன்னை நான் எப்படி அழைக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு நீ என்னை எப்போதும் போல் மஹி என்றே கூப்பிடு என்று தோனி கூறினார். எனக்கும், தோனிக்கும் உள்ள நட்பு மாறவில்லை. இன்னும் அவர் பழைய தோனியாக தான் இருக்கிறார்.

Story first published: Thursday, April 7, 2022, 20:22 [IST]
Other articles published on Apr 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+