Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாய்த்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 47 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதின.

சென்னையில் மாற்றம்

சென்னையில் மாற்றம்

சென்னை அணியில் டேவிட் ஹஸ்ஸி, சாமுவேல்ஸ் பத்ரீ ஆகியோர் நீக்கப்பட்டு டுபிளிஸ்சிஸ், ஹில்பனாஸ் சேர்க்கப்பட்டனர்.

மோர்கல் நீக்கம்

மோர்கல் நீக்கம்

கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு பெட் கம்மின்ஸ் அணியில் இடம் பெற்றார்.

சென்னை பேட்டிங்

சென்னை பேட்டிங்

டாஸ்ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

தடுமாற்றமான தொடக்கம்

தடுமாற்றமான தொடக்கம்

முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் 5 ரன்னில் உடனடியாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனை அடுத்து பிரன்டன் மெக்கல்லம் 28 ரன்னிலும், டுபிளிஸ்சிஸ் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அரைசதம் கடந்த ரெய்னா

அரைசதம் கடந்த ரெய்னா

ஆனால் 3வது வீரராக களம் இறங்கிய இறங்கிய சுரேஷ்ரெய்னா அடித்து ஆடினார். சிறப்பாக ஆடிய சுரேஷ்ரெய்னா 43 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 3 வது அரை சதம் இதுவாகும். மொத்தம் இது 21வது அரை சதமாகும்.

65 ரன்களில் அவுட்

65 ரன்களில் அவுட்

அபாரமாக சுரேஷ் ரெய்னா 52 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 65 ரன்கள் சேர்த்த நிலையில் பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் டென்டஸ்சாட்டிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

20 ஓவரில் 155 ரன்கள்..

20 ஓவரில் 155 ரன்கள்..

பின்னர் டோணியும் ரவீந்திர ஜடேஜாவும் விரைவாக அடித்து ஆடினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது.

அபார வெற்றி பெற்ற கொல்கத்தா

அபார வெற்றி பெற்ற கொல்கத்தா

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்னும், கம்பீர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மனிஷ் பாண்டே 28 பந்துகளில் 18 ரன்னுடனும், ஷகில் அல்-ஹசன் 20 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Story first published: Wednesday, May 21, 2014, 8:32 [IST]
Other articles published on May 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+