மும்பை: 3வது ஐபிஎல் தொடரில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
அரை இறுதியில் தோல்வியைத தழுவிய பெங்களூரும், டெக்கான் சார்ஜர்ஸும நேற்று நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் மோதின.
இதில் முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி மகா மோசமாக பேட்டிங் செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ரன்களை மட்டுமே எடுத்தது. கும்ப்ளே 4 விக்கெட்களை சாய்த்தார். அனிருத் சிங் 40 ரன்களும், வேணுகோபால ராவ் 24 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பெங்களூர் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 13.5 ஓவர்களில் 86 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் டிராவிட் 35 ரன்களும், கெவின் பீட்டர்சன் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி டுவென்டி 20 போட்டித் தொடரில் பங்கேற்க பெங்களூர் தகுதி பெற்றது.