Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சஞ்சு சாம்சனுக்கு பதிலா அஸ்வின் + ஆல் ரவுண்டரை கொடுக்க சிஎஸ்கே ரெடி? உத்தப்பா மாஸ்டர் பிளான்

சென்னை: இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றம் குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. எந்த வீரர் எந்த அணிக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரமுமான ராபின் உத்தப்பா ஒரு மாஸ்டர் பிளானை முன்வைத்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரும் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு இழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் பொறுப்பை ஏற்க சஞ்சு சாம்சன் சரியான தேர்வாக இருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

IPL Sanju Samson to CSK Ashwin amp amp Vijay Shankar in Exchange - Uthappa s Bold IPL Trade Idea

உத்தப்பாவின் அதிரடி டிரேட் யோசனை

இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வருவது எப்படி என்பது குறித்து ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், "சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கே ஒரு சிறந்த இடமாக இருக்கும். தோனியின் வாரிசாக அவர் உருவெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், சஞ்சு சாம்சனின் அதிகபட்ச விலை ஒரு தடையாக இருக்கலாம்" என்றார்.

இதற்கு ஒரு தீர்வாக, சிஎஸ்கே அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் முறையில் கொடுத்து, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே பெறலாம் என்பதே உத்தப்பாவின் யோசனையாகும்.

அஸ்வின் மீண்டும் ராஜஸ்தானுக்கு?

ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி, பின்னர் பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் மீண்டும் சிஎஸ்கே-வுக்குத் திரும்பிய அவரை "வீட்டிற்குத் திரும்பியுள்ளார்" என உத்தப்பா வரவேற்றார்.

சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை அஸ்வின் நன்கு அறிந்தவர் என்பதால், அவர் சிஎஸ்கே-வுக்கு ஒரு பெரிய பலம் என்றும் உத்தப்பா குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ஒரு வீரரை மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு அனுப்புவது சிஎஸ்கே-வுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், சஞ்சு சாம்சன் போன்ற ஒரு எதிர்காலக் கேப்டனுக்காக இந்த முடிவை எடுக்கலாம் என்பது உத்தப்பாவின் கருத்தாக உள்ளது.

விஜய் சங்கரின் பங்கு என்ன?

இந்த டிரேட் திட்டத்தில் விஜய் சங்கரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சங்கர் ஒரு திறமையான ஆல்-ரவுண்டர் என அறியப்பட்டாலும் கடந்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணிக்காக மோசமாக ஆடி இருந்தார்.

அதே சமயம் சிஎஸ்கே அணியில் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது உத்தப்பாவின் கருத்து. "விஜய் சங்கர் ஒரு நல்ல பந்துவீச்சாளர், ஆனால் சிஎஸ்கே அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை" என உத்தப்பா கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த ஃபினிஷர் தேவைப்படுவதால், விஜய் சங்கர் அந்த இடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கருதுகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ராபின் உத்தப்பாவின் இந்த கருத்து, சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்தால் அணியின் பேட்டிங் வரிசை மேலும் பலப்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அஸ்வின் போன்ற ஒரு அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரை இழப்பது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ, ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த வீரர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, August 13, 2025, 10:44 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+