Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி டி.வி.யில் ஐ.பி.எல். பார்க்க கூடுதல் கட்டணம்- இரு மடங்கு உயர வாய்ப்பு.. என்ன காரணம்?

மும்பை: இனி ஐ.பி.எல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலோ, சோனி சேனலிலோ பார்க்க வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஐ.பி.எல். போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமத்தை பி.சி.சி.ஐ. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விற்கும். இதன் மூலம் பெரும் தொகை பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கும்.

இதனை ஐ.பி.எல். அணி நிர்வாகத்திற்கு பிரித்து தரும் பி.சி.சி.ஐ, எஞ்சிய பணத்தை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும்.

மாறிய காலம்

மாறிய காலம்

ஒரு காலத்தில், தூர்தஷன் தொலைக்காட்சியிடம் எங்கள் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புங்கள், அதற்கான பணத்தை நாங்கள் தருகிறோம் என்று பி.சி.சி.ஐ. கெஞ்சும். ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப கோடி, கோடியாக பணம் தருகிறோம் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் கெஞ்சுகின்றன.

17 ஆயிரம் கோடி

17 ஆயிரம் கோடி

ஐ.பி.எல். போட்டிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை பி.சி.சி.ஐ. வருமானம் ஈட்டுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.பி.எல். உரிமத்தை ஸ்டார் நிறுவனம் 17 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து வாங்கியது. இந்த நிலையில், நடப்பு சீசனுடன் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.

40 ஆயிரம் கோடி

40 ஆயிரம் கோடி

இதனையடுத்து 2023 ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமங்களுக்கான ஏலம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இணைய வழி மூலம் நடைபெறுகிறது. இதன் மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை பி.சி.சி.ஐ.க்கு கிடைக்க உள்ளது.

ஸ்டார் Vs சோனி

ஸ்டார் Vs சோனி

இந்தப் போட்டியில் ஸ்டார் மற்றும் சோனி நிறுவனம் ஈடுபட உள்ளது. உரிமத்தை தக்க வைக்க ஸ்டாரும், மீண்டும் கைப்பற்ற சோனி நிறுவனமும் கடுமையாக போராடும் என்பதால் பி.சி.சி.ஐ. காட்டில் மழை தான். இதே போன்று டிஜிட்டல் உரிமத்தை பெற அமேசான் வீடியோவும் களத்தில் இறங்கியுள்ளது.

Recommended Video

IPL 2022 Mega Auction Final Players List: 590 cricketers to be auctioned | OneIndia Tamil
கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

இந்த நிலையில், சேனல்கள் அதிக பணம் கொடுத்து பி.சி.சி.ஐ.யிடமிருந்து உரிமத்தை வாங்கினால், அந்த பணத்தை மீட்க நம்மிடம் தானே சேனல்கள் பெறுவார்கள். இதனால் ஸ்டார், சோனி போன்ற கட்டண சேனல்களின் விலை கடுமையாக உயரும். அப்போது தான் அவர்களால் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும். கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.பி.எல். உரிமத்தை அதிக காசு கொடுத்து ஸ்டார் நிறுவனம் உரிமத்தை வாங்கிய போது அதன் சேனல் விலையை 12 ரூபாய் இருந்து 19 ரூபாயாக உயர்த்தியது. தற்போது, அது 40 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, February 1, 2022, 10:56 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+