ஐபிஎல் ஊழல்: சீனிவாசனின் குட்டை உடைத்த ஹஸ்ஸி
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் குருநாத் மெய்யப்பன் தான் என்று அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான மைக்கேல் ஹஸ்ஸி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் பெட்டிங்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என். சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து குருநாத் சென்னை அணியின் சிஇஓ இல்லை கிரிக்கெட்டில் ஈடுபாடு உடையவர் மட்டுமே என சீனிவாசன் ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்.
இந்த விவகாரத்தால் சீனிவாசன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது. இதையடுத்து அவர் தற்போது 3வது முறையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

அன்டர்நீத் தி சதர்ன் கிராஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான மைக்கேல் ஹஸ்ஸி அன்டர்நீத் தி சதர்ன் கிராஸ் என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளார்.

சீனியின் குட்டு உடைப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் குருநாத் மெய்யப்பன் தான். அவருக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கியவர் அவரது மாமனார் என். சீனிவாசனே என்று ஹஸ்ஸி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸ்
மெய்யப்பன் பெட்டிங்கில் சிக்கியவுடன் அவருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று சீனிவாசனும், அவருக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் தெரிவித்துவிட்டது.

அணி ரகசியங்கள்
குருநாத் மெய்யப்பன் பெட் கட்டும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரகசியங்களை, ஆட்ட யுக்திகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications